azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 31 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 31 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
In the past, Shankara strove to re-establish in the heart of man the faith that he is the Limitless Almighty; he tried to remove vicious traits that had taken residence there, so that man can move towards his Reality! When one has even a glimpse of that reality, one becomes free from ego, pride and despondency. Then, praise does not please him or abuse does not sadden him! One is rendered stable and secure, like a mountain peak, which no storm can shake. Like the screen in the cinema hall, he is not affected by the fire of calumny or the rain of extolment. The Buddha once said at Buddhagaya that good and bad, fame and ill-fame, praise and calumny, are as the two feet; one cannot move without either of them. They are inevitable in the process of living. Food and offal are both inside man; he has veins for the red blood as well as for the blue. A city has pipes under it for bringing drinking water and also for taking away the drainage. (Divine Discourse,Feb20,1966.)
LET COMPASSION AND SACRIFICE BE YOUR TWO EYES; LET EGOLESSNESS BE YOUR BREATH AND LOVE BE YOUR TONGUE. - BABA.
அக்காலத்தில் ஆதி சங்கரர், மனிதனின் உள்ளத்தில் ‘அவன் எல்லையற்ற பரம்பொருள்’ என்ற நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்த அரும்பாடுபட்டார்;
மனிதன் தனது மெய்ஞான நிலையை நோக்கிச் செல்ல உதவும் பொருட்டு, அவனது உள்ளத்தில் குடிகொண்டு விட்ட தீய பண்புகளை அகற்ற அவர் முயன்றார்! ஒருவன் அந்த மெய்ஞான நிலையை சிறிதளவேனும் உணர்ந்து கொண்டால் கூட, அவன் அகந்தை, தற்பெருமை மற்றும் விரக்தி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு விடுவான். பின்னர், புகழ்ச்சி அவனை மகிழ்விப்பதும் இல்லை அல்லது இகழ்ச்சி அவனை வருத்தப்படச் செய்வதும் இல்லை! எந்தப் புயலாலும் அசைக்க முடியாத மலைச்சிகரத்தை போல நிலையாக, உறுதியாக ஆகி விடுகிறான். திரையரங்கில் உள்ள வெள்ளித்திரையைப் போல, தீயாய் சுடும் இகழ்ச்சியாலோ, புகழ் மழையாலோ அவன் பாதிக்கப்படுவதில்லை. புத்தகயாவில் ஒருமுறை புத்தர், இரண்டு பாதங்களில் ஒன்றில்லாமல் மற்றொன்றால் எவ்வாறு நகர முடியாதோ அதைப் போன்றது தான், நல்லவை-கெட்டவை, நல்லபெயர்-கெட்டபெயர், புகழ்ச்சி-இகழ்ச்சி ஆகியவையும் என்று கூறினார். அவை வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை. உணவு மற்றும் கழிவு என்ற இரண்டுமே மனிதனுள் இருக்கின்றன; நல்ல ரத்தத்திற்கும், கெட்ட ரத்தத்திற்கும் கூட அவனிடம் ரத்த நாளங்கள் உள்ளன. ஒரு நகரத்தில் பூமியின் அடியில் குடிநீரைக் கொண்டு வருவதற்கான குழாய்களும் இருக்கின்றன; கழிவு நீரை எடுத்துச் செல்வதற்கான குழாய்களும் கூட இருக்கின்றன. (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 20,1966)
கருணையும், தியாகமும் உங்களுடைய இரண்டு கண்களாக இருக்கட்டும்; அகந்தையின்மை உங்கள் உயிர்மூச்சாகவும், ப்ரேமை உங்கள் நாவாகவும் இருக்கட்டும். - பாபா