azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 30 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 30 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The same God is the indweller of all beings. People attribute many names to God like Allah, Jesus, Rama, Krishna, etc., but God is one. Do not observe any difference between the different names of God. There are many sweets like laddu, jilebi and mysore pak, but they have the same essential ingredient of sugar in them. Names and forms may vary, but the Atma is the same in all. Rama and Krishna were not born with these names; they were given these names by their parents. God does not come down with any particular name. Nirgunam, niranjanam, sanatana niketanam, nitya, shuddha, buddha, mukta, nirmala swarupinam (God is attributeless, pure, final abode, eternal, unsullied, enlightened, free and embodiment of sacredness). Do not be carried away by names and forms. Rely on the principle of the Atma which is formless.(Divine Discourse,May21,2006.)
CONVERSE WITH GOD WHO IS IN YOU; DERIVE COURAGE AND CONSOLATION FROM HIM. - BABA.
அனைத்து உயிரினங்களிலும் உறைந்திருப்பது ஒரே இறைவன் தான். மனிதர்கள் இறைவனுக்கு அல்லா, இயேசு, ராமா, கிருஷ்ணா என பல பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஒருவனே. இறைவனின் பல திருநாமங்களுக்கிடையே எந்த வேற்றுமையையும் பாராட்டாதீர்கள். லட்டு, ஜிலேபி, மைசூர்பாக் என பல இனிப்புக்கள் இருந்தாலும், அவற்றில் எல்லாம் சர்க்கரை ஒன்றே இன்றியமையாத மூலப்பொருளாக இருக்கிறது. நாமங்களும், ரூபங்களும் மாறுபடலாம், ஆனால் அனைத்திலும் இருக்கும் ஆத்மா ஒன்றே தான். ராமரும், கிருஷ்ணரும் இந்தப் பெயர்களுடன் பிறக்கவில்லை; இந்தப் பெயர்கள் அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுக்கு அளித்தவை. இறைவன் ஒரு குறிப்பிட்ட நாமத்துடன் அவதரிப்பது இல்லை. நிர்குணம், நிரஞ்ஜனம், சனாதன நிகேதனம், நித்ய, சுத்த, புத்த, முக்த, நிர்மல ஸ்வரூபிணம் (இறைவன் குணங்களற்றவன், பரிசுத்தமானவன், இறுதி இலக்கானவன், நிரந்தரமானவன், அப்பழுக்கற்றவன், தன்னையுணர்ந்தவன், தன்னிச்சையானவன், புனிதத்தின் திருவுருவமானவன்). ரூப, நாமங்களைக் கண்டு மயங்கி விடாதீர்கள். ரூபமற்ற ஆத்ம தத்துவத்தைச் சார்ந்திருங்கள். (தெய்வீக அருளுரை, மே 21,2006)
உங்களுள் உறையும் இறைவனுடன் உரையாடுங்கள்;
அவனிடமிருந்து தைரியத்தையும், ஆறுதலையும் பெறுங்கள். - பாபா