azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 27 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 27 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Buddha taught that everyone was endowed with the same principle of Divinity. Truth is one, but wise refer to it by various names (Ekam Sat viprah bahudha vadanti). This message was conveyed by Lord Krishna in the Bhagavad Gita when He said that all beings were His own reflection, and none was different from Him. Buddha underwent great hardships to realise this truth. Many noble souls who were contemporaries of Buddha acknowledged Buddha’s greatness. They said Buddha experienced the truth they were unable to realise. As Buddha gave up all desires, he became an epitome of total renunciation. There was nothing in him except love. He considered love as his very life-breath. Remember, when you offer your salutations to someone, understand that you are saluting your own self. That someone is none other than your own reflection. See others just as you see your own reflection in the mirror. This is the message conveyed by the profound Mahavakya - Aham Brahmasmi.(Divine Discourse, May 13, 2006)
NAMES AND FORMS MAY BE DIFFERENT, BUT ALL BEINGS ARE
PART AND PARCEL OF THE SAME DIVINE PRINCIPLE. - BABA.
ஒவ்வொருவரும் ஒரே தெய்வீக தத்துவத்தைக் கொண்டவர்கள் என புத்தர் போதித்தார். சத்யம் ஒன்றே, ஆனால் ஆன்றோர்கள் அதைப் பல பெயர்களில் குறிப்பிடுகிறார்கள் (ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி). எல்லா உயிர்களும் என்னுடைய பிம்பங்களே; எதுவும் என்னிலிருந்து வேறுபட்டது அல்ல என இந்த செய்தியைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையில் தெரிவிக்கிறார். இந்த உண்மையை உணர புத்தர் கடுமையான சோதனைகளை அனுபவித்தார். புத்தரின் சமகாலத்தவர்களாக இருந்த ஞானியர் பலர் புத்தரின் மேன்மையை ஏற்றுக்கொண்டனர். அவர்கள், தங்களால் உணர முடியாத உண்மையை புத்தர் அனுபவபூர்வமாக உணர்ந்தார் எனக் கூறினர். புத்தர் எல்லா ஆசைகளையும் விட்டொழித்ததால் அவர் துறவறத்தின் எடுத்துக்காட்டாக ஆனார். அவருள் ப்ரேமையைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. அவர் ப்ரேமையை தனது உயிர்மூச்சாகக் கருதினார். நீங்கள் மற்றவருக்கு வணக்கம் கூறும் போது உங்களையே நீங்கள் வணங்குகிறீர்கள் என்பதை சிந்தனையில் வையுங்கள். அந்த மற்றொருவர் உங்கள் பிம்பமே அன்றி வேறொருவர் இல்லை. உங்களுடைய பிரதிபிம்பத்தைக் கண்ணாடியில் காண்பதைப் போல மற்றவர்களையும் காணுங்கள். ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்ற மஹாவாக்யம் தரும் செய்தி இதுவே. (தெய்வீக அருளுரை, மே 13,2006)
நாம ரூபங்கள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் அனைத்து உயிரினங்களும் ஒரே தெய்வீக தத்துவத்தின் அங்கங்களே. - பாபா