azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 19 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 19 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Where exactly does God reside? He is everywhere, in all beings. He is termed Omniscient and Omnipresent. Really speaking, He is love, and love pervades everywhere. That is all we need to know. There is no being without a trace of love. Love leads to ananda (Supreme bliss), pure and lasting. Many seek this ananda through their relationships with other individuals, others try to attain it by amassing fame, power and riches, and a few attempt to gain it by renunciation of material possessions and the desire for worldly pleasures. Detachment alone can confer ananda. The Upanishads proclaim that tyaga (sacrifice) alone can grant the Bliss of Immortality. One has to ignore all bonds of kinship and comradeship, give up all attachment and affection and, in the heart thus liberated, install God in all His glow. This is the only means to earn everlasting, undiminished ananda. (Divine Discourse, Jan 25, 1979.)
JUST AS THE END OF CULTURE IS PROGRESS, THE END OF KNOWLEDGE IS LOVE,
AND THE END OF WISDOM IS FREEDOM. – BABA
இறைவன் குறிப்பாக எங்கே வசிக்கிறான்? அவன் எங்கும், எல்லா உயிரினங்களிலும் இருக்கிறான். அவன் அனைத்தும் அறிந்தவன் மற்றும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன் என்று அழைக்கப்படுகிறான். உண்மையைக் கூற வேண்டும் என்றால், அவன் ப்ரேமையே, ப்ரேமை எங்கும் வியாபித்துள்ளது. இதை நாம் தெரிந்து கொண்டாலே, அதுவே போதும். ப்ரேமையின் உணர்வு இல்லாத உயிரினமே இல்லை. ப்ரேமை, பரிசுத்தமான, அழியாத பேரானந்தத்திற்கு இட்டுச் செல்கிறது. பலர் பிறருடனான உறவுகளின் மூலம் இந்த ஆனந்தத்தை நாடுகிறார்கள்; மற்றவர்கள், புகழ், பதவி மற்றும் செல்வங்களைக் குவிப்பதன் மூலம் இதை அடைய முயல்கிறார்கள்; மேலும் சிலர் ,பொருள் உடைமைகள் மற்றும் உலகியலான சுகங்களின் மீதான ஆசைகள் ஆகியவற்றைத் துறப்பதன் மூலம் இதைப் பெற முயல்கிறார்கள். பற்றின்மை மட்டுமே ஆனந்தத்தைத் தர முடியும். உபநிஷதங்கள், தியாகம் மட்டுமே, அமரத்துவத்தின் ஆனந்தத்தை அளிக்க முடியும் எனப் பறைசாற்றுகின்றன. ஒருவர், உறவுகள் மற்றும் நட்புக்களின் பிணைப்புகளை உதாசீனப்படுத்தி, பற்றுதல் மற்றும் பாசமனைத்தையும் விடுத்து, இப்படி விடுவிக்கப்பட்ட இதயத்தில் இறைவனை அவனது அனைத்து மாட்சிமையுடன் கொலு வீற்றிருக்கச் செய்ய வேண்டும். இந்த ஒன்றே நிரந்தரமான, குறையாத ஆனந்தத்தைப் பெறுவதற்கான வழியாகும். (தெய்வீக அருளுரை ஜனவரி 25,1979)
எவ்வாறு கலாசாரத்தின் முடிவு முன்னேற்றமோ, அவ்வாறே அறிவின் முடிவு ப்ரேமையும், ஞானத்தின் முடிவு மோக்ஷமும் ஆகும். - பாபா