azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 11 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 11 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Education consists of cultivating the following six qualities: "Good thoughts, good actions, adherence to truth, devotion, discipline and discharge of one's duties." When you have acquired the friendship of these six virtues, your life will become purposeful and satisfying. Students! Concentrate on studies from the beginning of the academic year and develop discipline and right habits so that you may make the best use of opportunities. Teachers should not consider that they are teaching for the sake of emoluments and students should not consider their studies as primarily for the purpose of getting a job. Education must develop self-reliance in you and prepare you for all the challenges of life. With faith in God, you must lead a righteous life and become true citizens of Bharat. The discipline and regulations you observe now will stand you in good stead all your life. Prepare yourselves to serve society and thereby propitiate God, whose grace is a greater benediction than all the gains from the world.(Divine Discourse, Jun 16, 1983)
FAITH IS AN INDIVIDUAL ASSET; IT IS ACQUIRED AND PRESERVED BY ONE'S OWN EFFORT. - BABA.
நற்சிந்தனைகள், நற்செயல்கள், சத்தியத்தைப் பற்றி ஒழுகுதல், பக்தி, ஒழுக்கம், மற்றும் ஒருவரது கடமைகளை ஆற்றுதல் ஆகிய குணங்களை வளர்த்துக் கொள்வதில் தான் கல்வி என்பது இருக்கிறது. நீங்கள் இந்த ஆறு நற்குணங்களின் நட்புறவைப் பெற்றுவிட்டால், உங்களுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும், திருப்தி அளிப்பதாகவும் ஆகிவிடும். மாணவர்களே! கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்தே படிப்பில் கவனம் செலுத்தி, வாய்ப்புக்களை சிறந்த முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ப, ஒழுக்கம் மற்றும் சரியான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதற்காகவே தாங்கள் கற்றுத் தருவதாகக் கருதக் கூடாது; மாணவர்கள் கல்வி பயில்வது முக்கியமாக தாங்கள் ஒரு வேலையைப் பெறுவதற்காகத் தான் என்று கருதக்கூடாது. கல்வி உங்களுள் தன்னம்பிக்கையை வளர்த்து, வாழ்க்கையின் அனைத்து சவால்களுக்கும் உங்களை தயாராக்க வேண்டும். இறைநம்பிக்கையோடு, நீங்கள் ஒரு தார்மீகமான வாழ்க்கை நடத்தி, பாரதத்தின் உண்மையான குடிமக்களாக ஆக வேண்டும். இப்போது நீங்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் மற்றும் விதிமுறைகள், உங்களுடைய வாழ்க்கை முழுவதிலும் நல்ல துணையாக நிற்கும். சமுதாயத்திற்கு சேவை செய்ய உங்களை நீங்களே தயாராக்கிக் கொண்டு இறைவனை திருப்திப்படுத்துங்கள்; ஏனெனில் உலகத்திலிருந்து நாம் பெறக்கூடிய எல்லா நன்மைகளையும் விட அவருடைய அருட்கருணை தான் மிகப்பெரும் ஆசியாகும். (தெய்வீக அருளுரை, ஜூன் 16,1983)
இறை நம்பிக்கை என்பது ஒருவரது தனிப்பட்ட சொத்தாகும்; அது ஒருவருடைய சொந்த முயற்சியின் மூலமே பெறப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. - பாபா