azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 10 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 10 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
It is not the creeds that men profess - whether Christianity or Islam or other religion - which lend value to their lives. The highest value is the fact of their humanness. All faiths combine to invest man with a unique effulgence. The various talents with which man is endowed should be used for good purposes on the basis that individual good is linked to social well-being. Man today has to go through transformation at three levels: First and foremost is spiritual transformation. Second comes the transformation in the attitude towards society. The third change is at the individual level. When spiritual transformation takes place, there is an automatic change in the attitude towards society. When society becomes harmonious and prosperous, the individual also changes. This three-fold transformation is implicit in the name ‘Sai’. ‘S’ stands for Spiritual change. ‘A’ for Association change; this is change in one's relationships with others in society. ‘I’ stands for INDIVIDUAL change. This triple transformation is what Sai desires. ( Divine Discourse, Nov 18, 1995.)
TRANSFORMATION IS THE MARK OF TRUE DEVOTION. - BABA
கிருஸ்துவ மதமோ, இஸ்லாமிய மதமோ அல்லது பிற மதமோ, தாங்கள் எந்த மதத்தைப் பின்பற்றுகிறோம் என்று மனிதர்கள் கூறிக்கொள்வது அவர்களுடைய வாழ்க்கைக்கு மதிப்பை அளிப்பதில்லை. அவர்களது மனிதப் பண்பே மிக உயர்ந்த மதிப்பாகும். அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து மனிதனுக்கு ஒரு தனிப்பட்ட ஒளியை ஊட்ட முற்படுகின்றன. தனி மனிதனின் நலன் சமுதாய நலனோடு தொடர்புடையது என்ற அடிப்படையில், மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு ஆற்றல்கள் நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். இன்றைய மனிதன் மூன்று நிலைகளில் நல்மாற்றம் பெற வேண்டும்: முதன்முதலில் ஆன்மிக நல்மாற்றம். இரண்டாவதாக வருவது சமுதாயத்தைப் பற்றிய மனப்பாங்கில் நல்மாற்றம். மூன்றாவது தனிமனித நிலையில் நல்மாற்றம். ஆன்மிக நல்மாற்றம் ஏற்படும் போது தானாகவே சமுதாயத்தைப் பற்றிய மனப்பாங்கில் நல்மாற்றம் ஏற்படும். சமுதாயம் இணக்கமாகவும், வளமாகவும் ஆகும்போது, தனிமனிதனும் மாற்றம் அடைகிறான். இந்த மூன்று விதமான நல்மாற்றங்களும் "SAI" என்ற பெயரில் பொதிந்துள்ளன. "S" என்பது ஆன்மிக (Spiritual) நல்மாற்றத்தைக் குறிக்கிறது. "A" என்பது சமுதாய (Association) அதாவது சமுதாயத்தில் ஒருவர் பிறருடன் கொள்ளும் உறவுகளில் நல்மாற்றத்தைக் குறிக்கிறது. ‘I’ என்பது தனிமனிதனில் (Individual) ஏற்படும் நல்மாற்றத்தைக் குறிக்கிறது. சாயி விரும்பும் மூன்று விதமான நல்மாற்றங்கள் இவையே. (தெய்வீக அருளுரை, நவம்பர் 18,1995)
நல்மனமாற்றமே உண்மையான பக்தியின் சின்னம். – பாபா