azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The Vedic declaration, Soham is demonstrated by the inhaling done during breathing. When you exhale and utter "Aham," you are giving up the "I". So-ham proclaims the identity of the individual and the Divine (I am He). This identity will not be understood as long as one is caught up in the tentacles of the material world. This is the truth about God. If one asks, "Where is God", the answer is given in the 18th canto of the Bhagavat Gita in Stanza 61. Krishna declared: "The Lord resides in the heart of all beings” (Eshwarah sarva bhutanam hriddese). We study the Gita; adore it; there is daily recitation, but no practical application in daily life! The one who realises his identity with the Divine will not cause hurt to anyone. Service to the public is true worship of God. The power of the Divine permeates everything. Our journey is, from the individual to the Universal, from 'Swam' (mine) to 'So-ham' (oneness with God), from 'I' to 'we'. (Divine Discourse, Feb 11, 1983.)
SADHANA (SPIRITUAL DISCIPLINE) IS THE ROYAL ROAD TO REACH THE DIVINE. - BABA.
வேதவாக்கான ஸோஹம் என்பது, சுவாசத்தின் போது மூச்சை உள்ளிழுப்பதன் மூலம் எடுத்துக் காட்டப்படுகிறது. மூச்சை வெளியேற்றி, நீங்கள் "அஹம்" என்று உச்சரிக்கும் போது, "நான்" என்பதை நீங்கள் வெளியேற்றுகிறீர்கள். தனி மனிதனும், தெய்வமும் ஒன்றே (நான் அவனே) என்பதை ஸோஹம் பறை சாற்றுகிறது. பொருட்களால் ஆன இவ்வுலகின் பிடிகளில் ஒருவர் சிக்கிக் கொண்டு இருக்கும் வரை, இந்த ஒற்றுமை புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கும். இறைவனைப் பற்றிய உண்மை இதுவே. "இறைவன் எங்கே இருக்கிறான்?" என்று ஒருவர் கேட்டால், அதற்கான பதில் பகவத்கீதையின் 18வது அத்தியாயத்தின் 61வது ஸ்லோகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர், "இறைவன் அனைத்து உயிரினங்களின் இதயத்தில் உறைகிறான்" (ஈஸ்வர ஸர்வ பூதானாம் ஹிருத்தேசே) என்று அறிவிக்கிறார். நாம் பகவத்கீதையைப் படிக்கிறோம்; அதைப் போற்றுகிறோம்; அனுதினமும் பாராயணம் நடக்கிறது, ஆனால் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படுவதே இல்லை! தன்னை இறைவனுடன் இனம் கண்டு கொண்டு உணர்ந்த ஒருவர், எவருக்கும் தீங்கிழைக்க மாட்டார். பொதுமக்களுக்கு சேவை செய்வதே உண்மையான இறை வழிபாடாகும். தெய்வீக சக்தி அனைத்திலும் ஊடுருவி இருக்கின்றது. தனி மனிதனிலிருந்து ப்ரபஞ்சமயத்திற்கும், "ஸ்வம்" (எனது) என்பதிலிருந்து "ஸோஹம்" (இறைவனுடன் ஒன்றிணைதல்) என்பதற்கும், "நான்" என்பதிலிருந்து "நாம்" எனும் நிலைக்கும் செல்வதே நமது பயணமாகும். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 11,1983)
ஆன்மிக சாதனையே இறைவனை அடைவதற்கான ராஜபாட்டை. - பாபா