azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 03 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 03 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Until you realise that you are Divine, that God is your Core and Reality, you will have to undergo these entrances and exits; the same newspaper should not be pored over again and again, day after day; one life must be enough to know the mystery. So, at least, recognise that there is a mystery, search for the secret, and unravel it for yourself. Ramakrishna used to cry in agony at the loss of another day, without the vision of the Divine Mother. Have that yearning; feel that sense of urgency. Seek to know now, yearn for that ecstasy this moment. Do not postpone or spend time discussing with others. You may have only a picture of Sai Baba before you, or an image in metal, or an idol in stone. But, if you have the faith that He is alive and present in it, and that He is in your heart and the hearts of all beings, then, you can get the ecstasy of that knowledge - the knowledge that He is omnipresent, omniscient and omnipotent. ( Divine Discourse, Feb 4, 1973)
THE MAN OF FAITH NEED NOT WORRY ABOUT WHO WILL TAKE CARE OF HIM
IF HE DEVOTES ALL HIS TIME TO THOUGHTS OF THE DIVINE. - BABA.
நீங்களே தெய்வீகம் என்பதையும், இறைவனே உங்களுடைய உட்கருவும், உண்மை நிலையும் ஆவான் என்பதையும் நீங்கள் உணரும் வரை, நீங்கள் (இவ்வுலகிற்கு) வருவதையும், போவதையும் அனுபவித்தே ஆக வேண்டும்; ஒரே செய்தித்தாளைத் திரும்பத் திரும்ப, தினந்தோறும் படித்துக் கொண்டே இருக்கக் கூடாது; மர்மத்தைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு பிறவியே போதுமானது. எனவே, குறைந்தபட்சம், ஒரு மர்மம் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதன் ரகசியத்தைத் தேடி, நீங்களே அதைக் கண்டு தெளியவும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் காளி மாதாவின் தரிசனம் இன்றி மேலும் ஒரு நாள் வீணாகிவிட்டதே என்று கதறி அழுவாராம். அப்படிப்பட்ட ஏக்கத்தினைக் கொண்டிருங்கள்; அதன் அவசரத்தை உணருங்கள். அதை இப்போதே தெரிந்து கொள்ள விழைந்து, இத்தருணத்திலேயே அந்தப் பரவசத்தைப் பெற ஏங்குங்கள். இதனை ஒத்திப் போடவோ அல்லது பிறரிடம் விவாதிப்பதில் நேரத்தை செலவிடவோ செய்யாதீர்கள். உங்கள் முன்னால் சாய்பாபாவின் ஒரு படமோ அல்லது உலோக விக்கிரஹமோ அல்லது ஒரு கற்சிலையோ மட்டுமே இருக்கலாம். ஆனால், அவர் அதில் உயிருடன் இருக்கிறார் என்பதிலும், அவர் உங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் இதயங்களிலும் குடிகொண்டு இருக்கிறார் என்பதிலும் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், பின்னர், அவர் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவர், அனைத்தும் அறிந்தவர், மேலும் ஸர்வ வல்லமையும் பொருந்தியவர் என்ற ஞானத்தின் பரவசத்தை நீங்கள் பெற முடியும். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 4,1973)
இறை நம்பிக்கை கொண்ட ஒருவர், எந்நேரமும் இறைச் சிந்தனையிலேயே தோய்ந்து இருந்தால், தன்னை யார் கவனித்துக் கொள்வார் என்று அவர் கவலைப்படத் தேவையில்லை. -பாபா