azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 25 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 25 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Talk lovingly and sweetly without hurting anyone. Do not cast angry looks. We should express our love while talking. Love is a supreme power. Therefore, call everybody with love, saying, “Come, brother, come.” Ask him about his difficulties, “Do you have financial or health problem?” After understanding his problems thoroughly, provide necessary help to him. There are some who lead a lonely life as they are without a father, mother, relatives or friends. We should offer brotherly affection to them. We should encourage them by saying, “I am like your brother,” and talk to them lovingly, saying, “Oh dear one, you have no elder or younger sister? I am your elder sister; I am your younger sister.” Speaking to them in this intimate way, we should give them courage and succour. You are all the children of one mother, verily. That mother is God. Follow the maxim: Brotherhood of Man and Fatherhood of God. (Divine Discourse, Jan 27, 2007)
YOU NEED NOT SHARE YOUR PROPERTY WITH ALL. WHOMSOEVER YOU COME ACROSS,
TALK TO THEM NICELY AND LOVE THEM WHOLEHEARTEDLY. - BABA.
எவரையும் புண்படுத்தாது, ப்ரேமையுடனும், இனிமையாகவும் பேசுங்கள். கோபமான பார்வையை கொண்டிருக்கக் கூடாது. நாம் பேசும்போது, நம்முடைய ப்ரேமையை வெளிப்படுத்த வேண்டும். ப்ரேமையே ஒரு தலைசிறந்த சக்தியாகும். எனவே ஒவ்வொருவரையும், "வாருங்கள், சகோதரரே, வாருங்கள்" என ப்ரேமையுடன் அழையுங்கள். "உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சனையா அல்லது உடல்நல பிரச்சனையா?" என அவரது கஷ்டங்களைப் பற்றி விசாரியுங்கள். அவரது பிரச்சனைகளை விவரமாகப் புரிந்து கொண்ட பிறகு, அவருக்குத் தேவையான உதவியைச் செய்யுங்கள். சிலர் ஒரு தனிமையான வாழ்க்கை வாழ்கின்றனர்; ஏனெனில் அவர்களுக்கு ஒரு தந்தையோ, தாயோ, உறவினர்களோ அல்லது நண்பர்களோ இல்லாததால் தான். நாம் அவர்களுக்கு சகோதரப் பாசத்தை அளிக்க வேண்டும். "நான் உங்களுடைய சகோதரன் போன்றவன்" எனக் கூறி நாம் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதோடு, "ஓ அன்பானவரே! உங்களுக்கு மூத்த அல்லது இளைய சகோதரி இல்லையா? நானே உங்களுடைய மூத்த சகோதரி, நானே உங்களுடைய இளைய சகோதரி" என ப்ரேமையுடன் அவர்களுடன் பேச வேண்டும். அவர்களுடன் இவ்வாறு நெருக்கமாகப் பேசுவதன் மூலம், நாம் அவர்களுக்கு தைரியமும், உதவியும் அளிக்க வேண்டும். உண்மையில், நீங்கள் அனைவரும் ஒரு தாயின் குழந்தைகளே. இறைவனே அந்தத் தாய். ‘மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள், இறைவனே அனைவருக்கும் தந்தை’ என்ற கோட்பாட்டைப் பின்பற்றுங்கள். (தெய்வீக அருளுரை, ஜனவரி 27, 2007)
நீங்கள் உங்களுடைய சொத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை. நீங்கள் யாரை சந்தித்தாலும் அவர்களுடன் அழகாகப் பேசி, அவர்களை முழு மனதுடன் நேசியுங்கள். - பாபா