azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 23 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 23 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Nothing can confer as much aananda (bliss) as virtue, neither wealth, nor material power, nor fame, nor scholarship. The highest virtue is humility, surrender to God. People speak of those who have no one to look after them as 'orphans' (anatha), but God looks after everyone. So no one can be an orphan. God alone is the orphan (anatha also means ‘one without a master’), for who can claim that he is God's guardian? Dedicate your thought, word and deed to God. Do not treat some of your activities as done for God and others as done for yourself. They are both like the two halves of a pulse grain. The plant sprouts from the middle of the grain, drawing sustenance equally from both halves. The alert and the inert, the living and the non-living, the moving and the non-moving are all God. Strengthen this faith and live in this faith. This is the prescription for perpetual Brahmananda (supreme bliss)! (Divine Discourse, Nov 23, 1983.)
TRUE DEVOTION REALLY MEANS INSTALLING THE DIVINE IN THE HEART
AND ENJOYING THE BLISS OF THAT EXPERIENCE. - BABA.
நற்குண சீலம் தரும் ஆனந்தத்தின் அளவிற்கு, செல்வம், புகழ், பொருளாற்றல், அறிவாற்றல் ஆகியவற்றால் தர இயலாது. மிக உயர்ந்த நற்குண சீலம் – பணிவு, இறைவனை சரணடைவதாகும். கவனித்துக் கொள்ள யாரும் இல்லாதவர்களை ‘அநாதைகள்’ என்று மக்கள் கூறுகிறார்கள்; ஆனால், இறைவன் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொள்கிறான். எனவே, யாருமே ஒரு அநாதையாக இருக்க முடியாது. இறைவன் மட்டுமே "அநாதை" (அநாதை என்றால் ‘தனக்கொரு தலைவன் இல்லாதவன்’ என்றும் ஒரு பொருளுண்டு), ஏனெனில், தான் இறைவனின் பாதுகாவலன் என்று யாரால் கூறிக்கொள்ள முடியும்? உங்கள் சிந்தனை, சொல் மற்றும் செயல் ஆகியவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள். உங்களுடைய சில பணிகள் இறைவனுக்காகச் செய்தவை, மற்றவை உங்களுக்காகச் செய்தவை என்று கருத வேண்டாம். அவை இரண்டுமே ஒரு தானியத்தின் இரு பாதிகளைப் போன்றவை. இவ்விரு பாதிகளிலுமிருந்து போஷாக்கைப் பெற்றே தானியத்திலிருந்து செடி முளைக்கிறது. விழிப்புள்ளவை - ஜடமானவை, உயிருள்ளவை - உயிரற்றவை, அசைபவை – அசையாதவை, இவை அனைத்தும் இறைவனே. இந்த நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டு, இந்த நம்பிக்கையில் வாழுங்கள். இதுவே இடையறாத ப்ரம்மானந்தத்திற்கான அருமருந்தாகும். (தெய்வீக அருளுரை, நவம்பர் 23, 1983)
இறைவனை இதயத்தில் பிரதிஷ்டை செய்து, அந்த அனுபவத்தின் பேரானந்தத்தில் திளைத்திருப்பதே உண்மையான பக்தியாகும். - பாபா