azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 20 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 20 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Rama is the supreme exemplar of how people should conduct themselves in the world, how a country should be governed, and how integrity and morality of human beings should be protected. High-minded actions, ideal qualities and sacred thoughts are basic foundations of character. Rama is very embodiment of these three attributes. Every human being should also cultivate sacred thought, right actions and good qualities. Rama demonstrated by His words, thoughts and actions how such a life can be lived. Rama acted upto the ancient injunction: "Speak the truth. Practise Righteousness." Eschewing harsh words, Rama pleased everyone by His sweet speech. He countered harsh speech from others with His composure, patience, sweetness and smile. He never pried into the affairs of others, never took notice of their faults, never indulged in ridicule, and never caused any pain to others by the way He spoke to them. It is essential for everyone to follow examples set by Rama and cultivate His many noble qualities and do righteous actions. (Divine Discourse Apr 9, 1995.)
THE RAMA PRINCIPLE IS ONE WHICH DELIGHTS THE HEART. - BABA.
உலகில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், ஒரு நாடு எவ்வாறு ஆளப்பட வேண்டும், மனிதர்களின் நேர்மை மற்றும் ஒழுக்கநெறி எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான ஓர் தலைசிறந்த எடுத்துக்காட்டு ஸ்ரீராமர். உயர்வான எண்ணம் கொண்ட செயல்கள், இலட்சிய பண்புகள் மற்றும் புனிதமான சிந்தனைகளே, குணநலனின் அடிப்படை அஸ்திவாரமாகும். இந்த மூன்று பண்புகளின் திருவுருவமே ஸ்ரீராமர். ஒவ்வொரு மனிதனும் கூட புனிதமான சிந்தனை, தார்மீகமான செயல்கள் மற்றும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்ரீராமர் தன் சொற்கள், சிந்தனைகள் மற்றும் செயல்கள் மூலம், எப்படி இத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என்று எடுத்துக் காட்டினார். வேத வாக்கான "சத்தியத்தை பேசு, தர்மத்தின்படி நட" என்பதற்கு ஏற்ப செயல்பட்டார். கடுமையான வார்த்தைகளைத் தவிர்த்து, ஸ்ரீராமர், ஒவ்வொருவரையும் அவரது இனிமையான பேச்சால் மகிழ்ச்சி அடையச் செய்தார். தனது நிலைகுலையாமை, பொறுமை, இனிமை மற்றும் இன்முகத்துடன் மற்றவர்களின் கடுமையான பேச்சை அவர் எதிர்கொண்டார். பிறருடைய விஷயங்களில் அவர் ஒருபோதும் தலையிட்டதில்லை, ஒருபோதும் அவர்களின் குறைகளைக் கண்டுகொண்டதில்லை, ஒருபோதும் இழிவுபடுத்துவதில் ஈடுபட்டதில்லை, மற்றவர் புண்படும் வகையில் தான் பேசியதில்லை. ஒவ்வொருவரும் ஸ்ரீராமர் நிலைநாட்டிய உதாரணங்களைப் பின்பற்றி, அவரது பல சீரிய குணங்களை வளர்த்துக் கொண்டு, தார்மீகமான செயல்களைச் செய்வது அத்தியாவசியமாகும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 9,1995)
ராம தத்துவம் இதயத்திற்கு குதூகலம் அளிக்கும் ஒன்றாகும். - பாபா