azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 18 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 18 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
God, when appearing with form for the sake of upholding dharma, behaves in a human way. He must! For, He has to hold forth the ideal life before people and confer the experience of joy and peace on people. His movements and playful activities might appear ordinary and commonplace to some eyes. But each will be an expression of beauty, truth, goodness, joy and exaltation. Each will captivate the world with its charm and purify the hearts that contemplate on it. Each will overcome all agitations of the mind, tear veil of illusion, and fill consciousness with sweetness. There can be nothing ordinary and commonplace in the career of Avatars. Whatever is seen and taken as of that nature is really super-human, super-natural, deserving high reverence! The story of Rama is not a story of an individual; it is the story of the universe! Rama is the personification of the basic Universal in all beings. He is in all, for all time, in all spaces! (Ramakatha Rasavahini, Ch 1, “Rama – Prince & Principle”)
FOLLOW THE EXAMPLE OF RAMA, WHO BECAME ADORABLE BECAUSE OF HIS EXEMPLARY LIFE. - BABA.
தர்மத்தை நிலைநாட்டுவதற்காக மனித ரூபத்தில் தோன்றும்போது, இறைவன் ஒரு மனிதனாக நடந்து கொள்கிறான். அவன் அப்படித்தான் இருக்க வேண்டும்! ஏனெனில், அவன் மனிதர்களுக்கு முன் ஒரு இலட்சிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டி, மக்களுக்கு சாந்தி மற்றும் சந்தோஷத்தின் அனுபவத்தை அளிக்க வேண்டும். சிலரின் பார்வைக்கு, அவனது நடத்தைகளும், விளையாட்டான செயல்களும் சாதாரணமாகவும், பொதுவானதாகவும் தோன்றலாம். ஆனால், ஒவ்வொன்றும் சுந்தரம், சத்யம், சிவம், சந்தோஷம் மற்றும் உயர்நிலையின் ஒரு வெளிப்பாடாகும். ஒவ்வொன்றும் தனது அழகால் உலகத்தை வசீகரித்து, அவற்றை தியானிக்கும் இதயங்களைப் பரிசுத்தமாக்கும். ஒவ்வொன்றும் மனக்கலக்கங்களை வென்று, மாயையின் திரையைக் கிழித்தெறிந்து, உள்ளுணர்வை இனிமையால் நிரப்பும். அவதாரங்களின் வாழ்க்கையில் சாதாரணமானவை மற்றும் பொதுவானவை என்று எதுவும் இல்லை. கண்டவையும், இயல்பானவை எனக் கருதப்பட்டவையும் உண்மையில் அமானுஷ்யமானவை, இயற்கைக்கு அப்பாற்பட்டவை, பெரும் வணக்கத்திற்கு உரியவை! ஸ்ரீராமரின் கதை ஒரு தனி மனிதனின் கதை அல்ல, அது பிரபஞ்சத்தின் கதை! அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கும் பிரபஞ்சமயமான ஆதாரத்தின் உருவகமே ஸ்ரீராமர். அவர் அனைத்துள்ளும், எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கிறார்! (ராமகதா ரஸ வாஹினி - அத்தியாயம் 1)
தனது முன்னுதாரணமான வாழ்க்கையின் மூலம் போற்றுதலுக்கு உரியவனாக ஆன ஸ்ரீராமரை ஒரு உதாரணமாகப் பின்பற்றுங்கள். - பாபா