azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 15 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 15 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Take proper care of your body and always contemplate on the selfless, pure, and steady Atmic principle. You are a member of society. Your welfare depends on the welfare of society. So aspire for the well-being of one and all. May all the beings in all the worlds be happy! Eschew narrow-mindedness; cultivate broad feelings to experience bliss. Embodiments of Love! New Year brings with it some good results also. New Year is not celebrated merely to partake of delicious dishes. You must imbibe sacred feelings and resolve to lead a fruitful life. The good and bad of the world depends on your conduct, which in turn depends on your thoughts. So develop good thoughts. Only then will you be able to lead a noble life. Set an ideal to your fellowmen. Give them happiness. Show compassion towards them. Talk to them lovingly. This is possible when you acquire Divine love. So strive to become recipients of Divine love. Chant His Name wholeheartedly! (Divine Discourse, Mar 26, 2001)
SURRENDERING THE FRUITS OF ONE’S ACTIONS TO THE LORD IS REAL SACRIFICE. - BABA.
நீங்கள் உங்கள் உடலைச் சரியாகப் பராமரித்துக் கொண்டு, எப்போதும் தன்னலமற்ற, தூய மற்றும் நிலையான ஆத்மாவை தியானியுங்கள். நீங்கள் சமுதாயத்தின் ஒரு அங்கத்தினர். உங்களது நலன் சமுதாயத்தின் நலனை சார்ந்து இருக்கிறது. எனவே, அனைவரின் நலனையும் நாடுங்கள். அனைத்து உலகங்களில் உள்ள அனைத்து உயிரினங்களும் சந்தோஷமாக இருக்கட்டும்! குறுகிய மனப்பாங்கினை விட்டு விடுங்கள்; ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு விசாலமான உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். ப்ரேமையின் திருவுருவங்களே! புத்தாண்டு அதனுடன் சில நற்பலன்களையும் கொண்டு வருகிறது. ருசியான பலகாரங்களை தின்பதற்காக மட்டுமே புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை. நீங்கள் புனிதமான உணர்வுகளை மனதிற்கொண்டு ஒரு பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு முடிவெடுக்க வேண்டும். உலகின் நல்லவை மற்றும் கெட்டவை உங்கள் நடத்தையைப் பொறுத்து இருக்கிறது, அதாவது உங்களுடைய எண்ணங்களைப் பொறுத்து இருக்கிறது. எனவே, நற்சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகே, நீங்கள் ஒரு சீரிய வாழ்க்கை வாழ முடியும். சக மனிதர்களுக்கு நீங்கள் ஒரு இலட்சிய மனிதராக விளங்குங்கள். அவர்களுக்கு சந்தோஷத்தை அளியுங்கள். அவர்களிடம் பரிவு காட்டுங்கள். அவர்களிடம் ப்ரேமையுடன் பேசுங்கள். தெய்வீக ப்ரேமையை நீங்கள் பெறும் போதுதான் இது சாத்தியமாகும். எனவே, தெய்வீக ப்ரேமையைப் பெறுவதற்கு பாடுபடுங்கள். இறைவனது திருநாமத்தை இதயபூர்வமாக ஜெபியுங்கள்! (தெய்வீக அருளுரை, மார்ச் 26, 2001)
ஒருவரது செயல்களின் பலன்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பதே உண்மையான தியாகமாகும். - பாபா