azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 13 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 13 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Ugadi celebration is an annual reminder of man's obligation to express his gratitude to the Divine for all benefits received from God. We hail the new year as Samvatsara because it signifies omnipresence (in time and space) of the Divine. Samvatsara does not merely mean a period (of the year) made up of minutes, hours, days and months. Every moment is Samvatsara, because without seconds, minutes, etc. there cannot be a year. If the year is to be sanctified, every moment is to be sanctified. Every second constitutes a year. It is not the new year that matters. Every new second is significant. Hence, you should fill every moment with sacred thoughts, with pure feelings and pure actions. Every moment you should try to get rid of bad thoughts and fill your mind with good thoughts. (Divine Discourse, Apr 7, 1989)
ONE HAS TO AVOID SPENDING PRECIOUS TIME IN USELESS PURSUITS.
ONE HAS TO BE EVER VIGILANT. - BABA.
மனிதன் இறைவனிடமிருந்து பெற்ற அனைத்துப் பயன்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டிய கடமையை வருடந்தோறும் நினைவுபடுத்துவதே உகாதிப் பண்டிகை. தெய்வீகம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பதைக் (காலம் மற்றும் தேசம்) குறிப்பதால் தான் நாம் புத்தாண்டை ஸம்வத்ஸரா என்று போற்றுகிறோம். ஸம்வத்ஸரா (வருடம்) என்றால், நிமிடங்கள், மணிகள், நாட்கள் மற்றும் மாதங்களால் ஆன ஒரு காலம் மட்டுமே என்று பொருளல்ல. ஒவ்வொரு தருணமும் ஸம்வத்ஸரமே; ஏனெனில், நொடிகள், நிமிடங்கள் ஆகியவை இல்லாமல் ஒரு வருடம் இருக்க முடியாது. வருடம் புனிதமாக்கப்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு தருணமும் புனிதமாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நொடியும் உள்ளடக்கியதே ஒரு வருடம் ஆகும். புத்தாண்டு முக்கியமல்ல; ஆனால் ஒவ்வொரு புது நொடியும் முக்கியமானது. எனவே, நீங்கள் ஒவ்வொரு தருணத்தையும் புனிதமான சிந்தனைகள், தூய உணர்வுகள் மற்றும் தூய செயல்களால் நிரப்ப வேண்டும். ஒவ்வொரு தருணத்திலும், நீங்கள் தீய சிந்தனைகளை விடுத்து, உங்கள் மனதை நற்சிந்தனைகளால் நிரப்ப வேண்டும். (தெய்வீக அருளுரை ஏப்ரல் 7, 1989)
வீண் வேலைகளில் விலை மதிப்புள்ள நேரத்தை செலவழிப்பதை ஒருவர் தவிர்க்க வேண்டும். எப்போதும் விழிப்புடன் ஒருவர் இருக்க வேண்டும் – பாபா