azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 12 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 12 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The third qualification (apart from viveka and vairagya) for yearning to know Brahman consists of six virtues: mind control, body and sense control, withdrawal from sensory objects, forbearance, unwavering faith, and equanimity (sama, dama, uparati, titiksha, sraddha, and sama-dana). Mind control (sama) is very hard to attain. The mind can cause bondage, but it can also confer liberation. It is an amalgam of passionate (rajasic) and ignorant (tamasic) attitudes. It is easily polluted. It relishes in hiding the real nature of things and casting on them forms and values that it desires. So, activities of the mind must be regulated. The mind has two characteristics. First, it runs helplessly after the senses. Whichever sense the mind follows, it is inviting disaster. When a pot of water becomes empty, we need not infer that it has leaked away through ten holes; one hole is enough to empty it. So too, even if one sense is not under control, one will be thrown into bondage. Therefore, every sense must be mastered to achieve mind control! (Sutra Vahini, Ch 1.)
DO NOT CONDEMN THE MIND AS A MONKEY! IT IS A FINE INSTRUMENT WITH WHICH YOU CAN WIN EITHER LIBERATION OR BONDAGE. DEPENDS ON HOW YOU MANIPULATE IT! - BABA.
பரப்ரம்மத்தைத் தெரிந்து கொள்ள விழைவோருக்கான மூன்றாவது தகுதி - (விவேகம் மற்றும் வைராக்கியத்தைத் தவிர), ஆறு நற்குணங்களான மனக்கட்டுப்பாடு, உடல் மற்றும் புலனடக்கம், புலன்களை ஈர்க்கும் பொருட்களிலிருந்து விலகி இருத்தல், சகிப்புத்தன்மை, உறுதியான நம்பிக்கை, மற்றும் சமச்சீரான மனப்பாங்கு (ஸமா, தமா, உபரதி, திதிக்ஷை, சிரத்தை மற்றும் ஸமாதானம்) ஆகியவையே. மனக்கட்டுப்பாடு (ஸமா) - இதைப் பெறுவது மிகவும் கடினம். மனம் பந்தத்தை ஏற்படுத்தும், ஆனால் அதுவே மோக்ஷத்தையும் அளிக்கவல்லது. அது ரஜோ மற்றும் தமோ குணங்களின் கலவை. அது எளிதாக மாசடையக் கூடியது. மனமானது, பொருட்களின் உண்மை நிலையை மறைப்பதில் இன்புற்று, அவற்றின் மீது தான் விரும்பும் ரூபங்கள் மற்றும் பண்புகளை அமைத்து விடக்கூடியது. எனவே மனதின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மனதிற்கு இரண்டு பண்புகள் உண்டு. முதலில், அது புலன்களின் பின்னால் தலைதெறிக்க ஓடுகின்றது. மனம் எந்தப் புலனைப் பின்பற்றினாலும், அது அழிவையே தேடிக் கொள்கிறது. ஒரு பானையில் உள்ள தண்ணீர் காலியாகி விட்டால், அது பத்து ஓட்டைகளின் வழியாகக் கசிந்துவிட்டது என நாம் ஊகிக்கத் தேவையில்லை; அதைக் காலியாக்க ஒரு ஓட்டையே போதும். அதைப் போலவே, ஒரே ஒரு புலன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் கூட, ஒருவர் பந்தத்தில் பிணைக்கப்பட்டு விடுகிறார். எனவே, மனக்கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு ஒவ்வொரு புலனும் அடக்கப்பட வேண்டும். (சூத்ர வாஹினி, அத்தியாயம்-1)
மனம் ஒரு குரங்கு எனப் பழிக்காதீர்கள்! அது, மோக்ஷம் அல்லது பந்தத்தைப் பெறுவதற்கான ஒரு சிறந்த கருவியாகும். நீங்கள் அதை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது! - பாபா