azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 08 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 08 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Engage yourselves in pure activities with pure hearts and earn a good name. What you have to offer to Me is the good name earned by you. This is the highest expression of your gratitude. Do not bring a bad name by your conduct in the outside world. It does not matter much if you fail to bring a good name, but in no circumstances should you earn a bad name. Even if you fail to be helpful to others, do not cause harm to others. Students should bear this in mind. Not students alone, but all spiritual aspirants should cherish in their hearts with gratitude the good done to them by others and always remember whatever form in which help was rendered to them. Only those who lead such grateful lives will be able to find peace and happiness in their lives. (Divine Discourse, Dec 25, 1991.)
THE FOREMOST QUALITY EVERY HUMAN BEING SHOULD HAVE IS GRATITUDE.
WITHOUT IT, MAN CEASES TO BE HUMAN. - BABA.
தூய இதயங்களுடன் உங்களை நீங்களே பரிசுத்தமான பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு நற்பெயரை சம்பாதித்துக் கொள்ளுங்கள். எனக்கு நீங்கள் அர்ப்பணிக்க வேண்டியது, நீங்கள் ஈட்டிய நற்பெயரைத் தான். இதுவே நன்றியினை சிறந்த முறையில் வெளிப்படுத்துவதாகும். வெளி உலகில் உங்களுடைய நடத்தையின் மூலம் கெட்ட பெயரைக் கொண்டு வராதீர்கள். நீங்கள் நற்பெயரை கொண்டு வரத் தவறிவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் ஒரு கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்ளக் கூடாது. உங்களால் பிறருக்கு உதவ முடியாமல் போனாலும் கூட, பிறருக்குத் தீங்கு செய்யாதீர்கள். மாணவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும். மாணவர்கள் மட்டுமல்ல, அனைத்து ஆன்மிக சாதகர்களும், மற்றவர்கள் அவர்களுக்கு செய்த நன்மையை தங்கள் இதயங்களில் நன்றியோடு போற்றி, ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு ஆற்றப்பட்ட உதவியை எப்போதும் நினைவு கூற வேண்டும். இப்படிப்பட்ட நன்றிபூர்வமான வாழ்க்கையை நடத்துபவர்களே, தங்களுடைய வாழ்க்கையில் சாந்தி மற்றும் சந்தோஷத்தைக் காண முடியும். (தெய்வீக அருளுரை, டிசம்பர் 25, 1991)
நன்றி உணர்வே ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய தலையாய குணமாகும். அது இல்லாத மனிதன், மனிதனாக இருக்க முடியாது. - பாபா