azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
An able monarch will have his ministers under control; he will direct them along proper lines and maintain peace and security of the kingdom. On the other hand, a monarch who allows himself to be controlled by ministers does not deserve the throne; he is spurned and disgraced. His kingdom has no peace and security. The mind is the monarch in man; senses are ministers. If the mind is the slave of its senses, you will have no peace. Every spiritual aspirant who aspires to achieve expression and expansion of the Divine in oneself must therefore earn mastery over the senses. That is the first step. The next one is the conquest of the mind, its elimination. The third is uprooting the vasanas (innate tendencies), and the fourth, attainment of jnana (spiritual wisdom). The branches are the senses; the trunk is the mind; and the roots are innate tendencies. All three must be overcome and destroyed, so that awareness of the Divine Reality can be gained.
YOU CANNOT LIBERATE YOURSELF FROM THE BONDAGE TO THE WHEEL OF DUALITY (PLEASURE AND PAIN, JOY AND GRIEF ETC.) SO LONG AS YOU ARE LED BY YOUR SENSES. – BABA
ஒரு திறமையான மன்னர் தனது அமைச்சர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பார்; அவர் அவர்களை சரியான பாதைகளில் வழிநடத்தி, ராஜ்யத்தின் சாந்தியையும் பாதுகாப்பையும் பராமரிப்பார். மாறாக, மந்திரிகளால் தன்னைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் மன்னர் சிம்மாசனத்திற்கு அருகதையானவர் அல்ல: அவர் புறக்கணிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவார். அவரது ராஜ்யத்தில் சாந்தியும், பாதுகாப்பும் இருக்காது. மனிதனில் மனமே அரசர்; புலன்களே அமைச்சர்கள். மனம் புலன்களுக்கு அடிமையாக இருந்தால், உங்களுக்கு சாந்தியே இருக்காது. தனக்குள் தெய்வீகம் வெளிப்பட்டு, விசாலமாவதை அடைய விழையும் ஒவ்வொரு ஆன்மிக சாதகனும், புலன்களின் மீது ஆளுமையைப் பெற வேண்டும். அதுவே முதல் படியாகும். அடுத்தது மனதை வெல்வது, அதை நீக்குவது. மூன்றாவது வாஸனாக்களை (உள்ளார்ந்த உந்துதல்கள்) வேரோடு பிடுங்கி எறிவது; நான்காவது ஞானத்தைப் (ஆன்மிக ஞானம்) பெறுவது. கிளைகளே புலன்கள்; மனமே தண்டு மேலும் வேர்களே உள்ளார்ந்த உந்துதல்கள். தெய்வீக உண்மை நிலையைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்றால், இந்த மூன்றுமே அடக்கப்பட்டு, அழிக்கப்பட வேண்டும்
நீங்கள் உங்கள் புலன்களால் இட்டுச் செல்லப்படும் வரை, இருமையின் (சுகம் மற்றும் துக்கம், சந்தோஷம் மற்றும் வருத்தம் போன்றவை) சக்கரத்துடன் உள்ள பந்தத்திலிருந்து, உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ள முடியாது- பாபா