azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 18 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 18 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Devotees today have some form of Divinity in their mind, but they perform rituals in a mechanical way without any consistency. All your charity and worship are of no significance to the Lord. Show your charity and wealth to the income tax department. God needs only your love. There is no tax on love. You may face any number of difficulties or hindrances. The Lord Himself may subject you to test. You should not waver because of these. All is for your good only. Do not grieve over any loss or exult over gain. Equal-mindedness in loss and gain is true sadhana. Some sit in dhyana (meditation), but their minds are in the market or in the hairdressing shop. Is this dhyana or japa? Your mind should be immersed in Krishna. Instead it is filled with thrishna (desires). What is needed is Krishna, not thrishna. Krishna will fulfil all your thrishnas. (Divine Discourse, Sep 3, 1999)
SERVE ALL WITH LOVE. THE DIVINE IS BOTH THE LOVER AND THE BELOVED.
HE IS THE DIRECTOR OF THE PLAY; HE IS ALSO THE ACTOR. - BABA
இன்று பக்தர்கள், இறைவனைப் பற்றிய ஏதோ ஒரு ரூபத்தை அவர்கள் மனதில் கொண்டிருக்கிறார்கள், ஆனால், அவர்கள் சடங்குகளை, எந்த இணக்கமும் இன்றி ஒரு இயந்திர ரீதியில் செய்கிறார்கள். உங்கள் தானம் மற்றும் வழிபாடு அனைத்தும், இறைவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. உங்களது தானத்தையும், செல்வத்தையும் வருமான வரித்துறைக்குக் காண்பியுங்கள். இறைவன் வேண்டுவது உங்களது ப்ரேமையை மட்டுமே. ப்ரேமைக்கு எந்த வரியும் கிடையாது. நீங்கள் எத்தனையோ இன்னல்கள் அல்லது இடையூறுகளை எதிர் கொள்ளக் கூடும். இறைவனே உங்களை சோதனைக்கு உள்ளாக்கலாம். இவைகளினால் நீங்கள் தடுமாறி விடக் கூடாது. அனைத்தும் உங்களது நலனுக்காக மட்டுமே. எந்த நஷ்டத்திலும் துக்கமடையவோ அல்லது எந்த லாபத்திலும் குதூகலிக்கவோ செய்யாதீர்கள். நஷ்டத்திலும், லாபத்திலும் சமச்சீரான மனப்பாங்குடன் இருப்பதே உண்மையான ஆன்மிக சாதனை. பலர் தியானம் செய்ய அமருகிறார்கள், ஆனால், அவர்களது மனங்கள் கடைவீதியிலோ அல்லது முடி திருத்தும் நிலயத்திலோ இருக்கின்றன. இது தான் தியானம் அல்லது ஜபமா? உங்கள் மனம் கிருஷ்ணா மீது லயித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அது த்ரிஷ்ணாவால் (ஆசைகளால்) நிரம்பி இருக்கிறது. இங்கு தேவை கிருஷ்ணா, த்ரிஷ்ணா அல்ல. கிருஷ்ணா உங்களது அனைத்து த்ரிஷ்ணாக்களையும் பூர்த்தி செய்வார்.
அனைவருக்கும் ப்ரேமையுடன் சேவை செய்யுங்கள். இறைவனே நேசிப்பவன், நேசிக்கப்படுபவன் என்ற இரண்டும் ஆவான். அவனே நாடகத்தின் இயக்குனர்; அவனே நடிகனும் கூட- பாபா