azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Why should one pray, meditate, contemplate on God or engage in good actions when one is anyway bound to face the consequences of one’s actions? You may not be able to see the transformation that comes within you by your good actions and prayer. You may not even be able to visualise it with your mind. Yet, this transformation in you is sure to attract God’s grace. Take the example of a bottle of pills. You may note the date of expiration mentioned on the bottle as the year 1994. You may also find the bottle and its contents intact even in the year 1999. But this does not mean that the pills will be effective if used today. The pills may be there, but they lose their power after the date of expiry. Likewise, the consequences of one’s actions are inevitable, be they good or bad, but divine grace will let their effects lapse! (Divine Discourse, Sep 3, 1999)
I BLESS THAT YOU MAY GET THE WILL TO PERSIST IN YOUR SADHANA, TILL SUCCESS IS WON. - BABA
எப்படி இருந்தாலும் ஒருவர் தனது செயல்களின் விளைவுகளை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்றால், ஒருவர் எதற்காக பிரார்த்திக்கவோ, தியானம் செய்யவோ, இறைவனைப் பற்றி சிந்திக்கவோ அல்லது நற்செயல்களில் ஈடுபடவோ வேண்டும்? உங்களது நற்செயல்கள் மற்றும் பிரார்த்தனையால் உங்களுள் வரும் நல்மாற்றத்தை உங்களால் காண முடியாமல் போகலாம். அதை உங்கள் மனதால் உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாமல் இருக்கலாம். இருந்தாலும், இந்த நல்மாற்றம் கண்டிப்பாக இறை அருளை ஈர்த்துத் தரும். மருந்து மாத்திரைகளின் ஒரு பாட்டிலின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது காலாவதி ஆகும் தேதி 1994 வருடம் என்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். அந்த பாட்டிலும் அதனுள் இருப்பவையும் ,1999 வருடத்தில் கூட, நன்றாகவே இருப்பதையும் நீங்கள் பார்க்கக் கூடும். ஆனால், இந்த மாத்திரைகளை இன்று பயன்படுத்தினால் அவை பயனளிக்கும் என்று அர்த்தமல்ல. மாத்திரைகள் அங்கு இருக்கலாம், ஆனால் அவை, காலாவதி தேதிக்குப் பிறகு, தங்களது சக்தியை இழந்து விடுகின்றன. அதைப் போலவே, அவை நல்லவையோ அல்லது கெட்டவையோ, ஒருவரது செயல்களின் விளைவுகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கலாம் , ஆனால், இறைவனது அருள் அவற்றின் விளைவுகளை காலாவதியாகுமாறு செய்து விடும்!
வெற்றி கிட்டும் வரை உங்களது ஆன்மிக சாதனையில் தொடர்ந்து இருப்பதற்கான மனத்திண்மை உங்களுக்கு கிடைக்கட்டும் என நான் ஆசீர்வதிக்கிறேன் - பாபா