azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 12 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 12 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
This world is a combination of time (kala), action (karma) and cause (karana). Every action has a reaction. When your finger gets cut with a knife, blood oozes out immediately. Here, the reaction is instantaneous. There is no time gap whatsoever. On the other hand, food we eat takes at least two hours to be digested. Take the case of a seed. A seed sown today takes three to four days to sprout. Here the time gap between action and reaction is slightly more as compared to the previous instances. On the other extreme, we have a case where it takes years for a sapling to grow into a gigantic tree and yield fruit. Thus, the time gap between action and reaction may vary depending on the nature of action. It is impossible to say when, how, and where one will face the consequences of one’s action. But know for sure that none can escape the consequences of their actions. (Divine Discourse, Sep 3, 1999)
LIBERATION FROM THE CONSEQUENCES OF IGNORANCE CAN BE SECURED
ONLY BY SPIRITUAL KNOWLEDGE (JNANA). - BABA
இந்த உலகம் நேரம் (காலா), செயல் (கர்மா) மற்றும் காரணம் (கரணா) ஆகியவற்றின் ஒரு கலவையாகும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு. உங்கள் விரல் ஒரு கத்தியால் கீறப்பட்டால், இரத்தம் உடனேயே வெளிப்படுகிறது. இங்கு எதிர் செயல் உடனடியாக நிகழ்கிறது. அங்கு எந்த விதமான கால தாமதமும் இல்லை. அதே சமயம், நாம் உண்ணும் உணவு ஜீரணமாவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ஆகிறது. ஒரு விதையை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று விதைத்த ஒரு விதை முளைப்பதற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இங்கு, செயலுக்கும், எதிர் செயலுக்கும் உள்ள கால இடைவெளி முன் கூறப்பட்ட சந்தர்ப்பங்களை விட கொஞ்சம் அதிகமே. மறுபுறத்தில், ஒரு மரக்கன்று ஒரு பிரம்மாண்டமான மரமாக வளர்ந்து பலனைத் தர பல ஆண்டுகள் பிடிக்கிறது. இவ்வாறு, செயலுக்கும், எதிர் செயலுக்கும் உள்ள கால இடைவெளி செயலின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். ஒருவர், தனது செயலின் விளைவுகளை எப்போது, எவ்வாறு, எங்கு எதிர்கொள்வார் என்பதைக் கூறுவது இயலாத காரியமே. ஆனால், எவரும் தங்களது செயலின் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அறியாமையின் விளைவுகளிருந்து விடுதலையை ,
ஆன்மிக அறிவின் (ஞானம்) மூலம் மட்டுமே பெற முடியும் - பாபா