azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 11 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 11 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Today is Shivaratri. It is an auspicious Night because the mind can be made to lose its hold by devoting the night to prayer. According to the scriptures, the Moon is the presiding deity of the mind. Shivaratri is prescribed for the fourteenth night of the dark half of the month, the night previous to the New Moon when the Moon suffers from total blackout. The Moon and the mind which it rules over are drastically reduced every month on this night. When that night is devoted to vigilant adoration of God, the remnant of the wayward mind is overcome and victory ensured. This month's Shivaratri is holier than the rest and so, it is called Mahashivaratri. With firm faith and a cleansed heart, the night should be spent in glorifying God. No moment should be wasted in other thoughts. Time flees fast. Like a block of ice, it melts soon and flows away; like water held in a leaky pot, it disappears drop by drop. The time allotted for one's life ticks off quite soon, and the span ends sometime somehow. So, be vigilant. Be warned. Be alert and aware. Seek the shelter of the Lord and transform every moment into a sacred celebration. (Divine Discourse, Feb 26, 1987)
ON THIS SHIVARATRI DAY, ENDEAVOUR TO ESTABLISH
FRIENDSHIP BETWEEN YOUR MIND AND GOD. - BABA
இன்று சிவராத்திரி. இந்த இரவை பிரார்த்தனைக்கு சமர்ப்பிப்பதன் மூலம், மனதின் பிடியைத் தளர்த்த முடியும் என்பதால் இது ஒரு மங்களகரமான இரவாகும். சாஸ்திரங்களின் படி, சந்திரனே மனதின் தேவதை ஆவார். சந்திரன் முழுமையாக இருட்டிவிடும் அமாவாசைக்கு முந்தின நாளான, தேய்பிறையின் பதிநான்காம் இரவு சிவராத்திரி எனப்படுகிறது. சந்திரனும், அது ஆட்சி புரியும் மனமும், ஒவ்வொரு மாதமும் இந்த இரவன்று வெகுவாகக் குறைக்கப்பட்டு விடுகிறது. எப்போது இந்த இரவு விழிப்புடன் இறைவனைப் போற்றுவதற்கு சமர்ப்பிக்கப்படுகிறதோ, அலைபாயும் மனதின் மிஞ்சி இருக்கும் பகுதி அடக்கப்பட்டு, வெற்றி உறுதி செய்யப்படுகிறது. இந்த மாதத்தின் சிவராத்திரி மற்றவைகளை விட அதிகம் புனிதமானதால், இது மஹாசிவராத்திரி எனப்படுகிறது. உறுதியான நம்பிக்கை மற்றும் ஒரு பரிசுத்தமாக்கப்பட்ட இதயத்துடன், இந்த இரவு இறைவனைப் போற்றுவதில் செலவிடப்பட வேண்டும். எந்தத் தருணத்தையும் பிற சிந்தனைகளில் வீணடிக்கக் கூடாது. காலம் வேகமாகக் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. ஒரு பனிக்கட்டியைப் போல, அது உருகிக் கரைந்து போய் விடும்; ஒரு கசியும் பானையில் வைக்கப்பட்ட நீரைப் போல, அது சொட்டு சொட்டாக மறைந்து விடும். ஒருவரது வாழ்க்கைக்கு ஒதுக்கப் பட்ட காலம் வெகு விரைவில் கழிந்து, ஏதோ ஒரு நேரத்தில், எவ்வாறாகவோ அது முடிந்து விடும். எனவே, விழிப்புடன் இருங்கள். எச்சரிக்கப்பட்டு இருங்கள். கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருங்கள். இறைவனின் அடைக்கலத்தை நாடி, ஒவ்வொரு தருணத்தையும் ஒரு புனிதமான கொண்டாட்டமாக நல்மாற்றம் செய்யுங்கள்.
இந்த சிவராத்திரி தினத்தன்று ,உங்கள் மனதிற்கும், இறைவனுக்கும்
இடையில் நட்பை உருவாக்கப் பாடுபடுங்கள் - பாபா