azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 27 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 27 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
There are five fingers in every hand. If each finger points towards its own peculiar direction, how can the hand hold or manipulate any article? If they come together and stay together, the hands can accomplish whatever they plan. Similarly, when one of you turns your head away at the sight of another, and ten people insist on ten diverse directions, how can any deed be done? You must all be equally alert, active and co-operative. Why must you compete and quarrel? Nothing in this world can last as such for long. Buddha diagnosed this correctly. He declared, "All is sorrow, all is transient; all are but temporary contraptions of ephemeral characteristics." Why should you be fatally fascinated by these finite things? Strive to gain the eternal, the infinite, the universal. One day you have to give up the body you have fed and fostered. How long can you keep all that you have earned and possessed with pride? (Divine Discourse, May 1981)
TRIVIAL THOUGHTS AND DESIRES AWARD ONLY SORROW;
HOLY THOUGHTS AND DESIRES AWARD DIVINE PEACE. - BABA
ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் உள்ளன. ஒவ்வொரு விரலும், அதற்கே உரித்தான வித்தியாசமான திசையில் சுட்டிக்காட்டிக் கொண்டு இருந்தால், கை எப்படி எதையும் பிடிக்க முடியும் அல்லது எந்தப் பொருளையும் கையாள முடியும்? அவை அனைத்தும் ஒன்றாக இணைந்து வந்து, ஒன்றாகச் சேர்ந்து இருந்தால் தான் கைகள் எந்தத் திட்டத்தையும் சாதிக்க முடியும். அதைப் போல, உங்களில் ஒருவர், மற்றவரைப் பார்த்தவுடன் உங்கள் தலையைத் திருப்பிக் கொண்டுவிட்டு , பத்து பேர் பத்து வித்தியாசமான திசைகளில் திரும்புவதை வற்புறுத்தினால், எப்படி எந்தப் பணியையும் செய்ய முடியும்? நீங்கள் அனைவரும் ஒரே மாதிரியான எச்சரிக்கை, சுறுசுறுப்பு, மற்றும் கூட்டுறவுடன் இருக்க வேண்டும். நீங்கள் ஏன் போட்டி போட்டுக் கொண்டு, சண்டையிட வேண்டும்? இந்த உலகில் எதுவும் அவ்வளவு காலம் நீடித்து இருக்க முடியாது. பகவான் புத்தர் இதைச் சரியாகக் கண்டறிந்தார். அவர்," அனைத்தும் துக்கமே, அனைத்தும் தோன்றி மறைபவையே; அனைத்தும் தாற்காலிகமான, நிலையற்ற குணங்களைக் கொண்ட கருவிகளே." என்று பறைசாற்றினார். இந்த வரையறுக்கப்பட்ட பொருட்களால் நீங்கள் ஏன் விபரீதமாக ஈர்க்கப்பட வேண்டும்? நிரந்தரமான, எல்லையற்ற, பிரபஞ்சமயமானவற்றைப் பெறுவதற்குப் பாடுபடுங்கள். நீங்கள் ஊட்டி வளர்த்த உடலை, நீங்கள் ஒரு நாள் விட்டு விடத்தான் வேண்டும். நீங்கள் சம்பாதித்து, பெருமையோடு சொந்தம் கொண்டாடிய அனைத்தையும் எவ்வளவு காலம் நீங்கள் வைத்துக் கொள்ள முடியும்?
அற்பமான சிந்தனைகளும் ஆசைகளும் துக்கத்தை மட்டுமே அளிக்கும்; புனிதமான சிந்தனைகளும் ஆசைகளும் தெய்வீக சாந்தியை அளிக்கும் - பாபா