azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 23 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 23 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Everyone should respect all others as one's own kin, having the same Divine Spark, and the same Divine Nature. Then, there will be effective production, economic consumption and equitable distribution, resulting in peace and promotion of love. Now, love based on the Innate Divinity is absent and so, there is exploitation, deceit, greed and cruelty. If man becomes aware of all men being 'cells' in the Divine body, then there will be no more 'devaluation' of man. Man is a diamond; but, is now treated by others and by oneself as a piece of glass! Man can realise his mission on the earth only when he knows himself as Divine and when he reveres all others as Divine. And, man has to worship God in the form of Man. God appears before him as blind beggar, an idiot, a leper, a child, a decrepit old man, a criminal or a madman. You must see even behind those veils, the divine embodiment of love, power and wisdom, the Sai, and worship Him through selfless service. (Divine Discourse, Apr 01, 1975)
MEN ARE MORE VALUABLE THAN ALL THE WEALTH OF THE WORLD. - BABA
ஒவ்வொருவரும், மற்றவர்கள் அனைவரையும்,தங்களது சொந்த உறவாக,அதே தெய்வீகக் கீற்றினை உடையவர்களாக, அதே தெய்வீக இயல்பைக் கொண்டவர்களாகக் கருத வேண்டும். பின்னர், பயனுள்ள உற்பத்தி, சீரான நுகர்வு மற்றும் சமமான விநியோகம் ஆகியவை ஏற்பட்டு அதன் விளைவாக சாந்தி மற்றும் ப்ரேமை வளரும்.இன்று தெய்வீகத்தின் அடிப்படையிலான ப்ரேமை இல்லை; எனவே, சுரண்டல், வஞ்சகம், பேராசை மற்றும் கொடுமை ஆகியவை இருக்கின்றன. எல்லா மனிதர்களும் தெய்வீக உடலின் 'செல்கள்' என்பதை மனிதன் அறிந்தால், மனிதனின் 'மதிப்பிழப்பு' இனி இருக்காது. மனிதன் ஒரு வைரமாவான்; ஆனால், இன்றோ அவன் மற்றவராலும், தன்னாலுமே ஒரு கண்ணாடித் துண்டாகக் கருதப்படுகிறான்! மனிதன் தன்னைத் தானே தெய்வீகமானவன் என்று தெரிந்து கொண்டும், மற்றவர்கள் அனைவரையும் தெய்வீகமானவர்கள் என்று மதித்தாலும் மட்டுமே, உலகில் தனது பணி என்ன என்பதை அவன் உணர முடியும். மேலும் மனிதன் இறைவனை மனித ரூபத்தில் ஆராதிக்க வேண்டும்.இறைவன், அவன் முன் ஒரு குருட்டுப் பிச்சைக்காரனாக,ஒரு முட்டாளாக,ஒரு தொழுநோயாளியாக,ஒரு குழந்தையாக, ஒரு முதிர்ந்த வயதானவராக, ஒரு குற்றவாளியாக அல்லது ஒரு பைத்தியக்காரனாகத் தோன்றுகிறான். நீங்கள் இந்தத் திரைகளுக்குப் பின்னாலும் கூட இருக்கும் ப்ரேமை, வலிமை மற்றும் ஞானத்தின் தெய்வீகத் திருவருமான, சாயியைக் கண்டு, தன்னலமற்ற சேவையின் மூலம் அவரை ஆராதிக்க வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து செல்வங்களைக் காட்டிலும்,
மனிதர்கள் அதிக மதிப்பு வாய்ந்தவர்கள்- பாபா