azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 22 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 22 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
There are thousands of Bhajana Mandalis (groups for devotional singing), under the auspices of the Sathya Sai Seva Samitis active all over the world. They hold bhajan sessions for about an hour, once or twice a week, and disperse thereafter. They sing the glory of God, in various Names and Forms, and are elated by that experience. The purpose of loud, congregational prayers is different from the silent individual prayers. It is a joint, concerted and mutually helpful effort of Sadhana to overcome the six internal foes of man - lust, anger, greed, attachment, conceit and hatred. These nocturnal birds infest the tree of life and foul the heart where they build their nests. When we sing aloud the Glory of God, the heart is illumined and they cannot bear the light. Besides, the voice that rises from many throats frightens them and they fly away. (Divine Discourse, Apr 01, 1975)
BHAJAN (GROUP DEVOTIONAL SINGING) IS A SPIRITUAL PRACTICE FOR ALL WHO SHARE IN IT - BABA
உலகனைத்திலும் உள்ள ஸ்ரீசத்ய சாய் சேவை சமிதிகளின் கீழ் ஆயிரக்கணக்கான பஜனை மண்டலிகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. அவர்கள் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை பஜனைகளை நடத்தி பின்னர் கலைந்து விடுகின்றனர். அவர்கள் இறைவனது மகிமையை, அவனது பல நாம ரூபங்களில் பாடி அந்த அனுபவத்தின் மூலம் மனம் திளைக்கின்றனர். உரத்த, கூட்டுப் பிரார்த்தனைகளின் நோக்கம் அமைதியான தனி மனித பிரார்த்தனைகளின் நோக்கத்திலிருந்து மாறுபட்டதாகும். அது, மனிதனது அக விரோதிகளான காமம், க்ரோதம், மோஹம், லோபம், மதம் மற்றும் மாத்ஸர்யம் ஆகியவற்றை வெல்வதற்கான, கூட்டாக இணைந்த மற்றும் பரஸ்பரம் உதவும் ஒரு ஆன்மிக சாதனை முயற்சியாகும். இந்த இருட்டில் வாழும் பறவைகள் வாழ்க்கை எனும் மரத்தைப் பாதித்து அவைகள் கூடு கட்டும் இதயங்களைக் கெடுத்து விடுகின்றன.நாம் இறைவனது மகிமையை உரக்கப் பாடும் போது, இதயம் ஒளிர் விட்டுத் திகழுகிறது; இவைகளால் அந்த வெளிச்சத்தைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. மேலும் பல தொண்டைகளிலிருந்து வரும் குரல் அவற்றை அச்சுறுத்தி விடுவதால், அவை பறந்து ஓடி விடுகின்றன.
பஜனை (கூட்டாக பக்தியில் பாடுவது) என்பது,
அதில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரு ஆன்மிக சாதனையாகும்- பாபா