azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 19 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 19 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
God cannot be identified with one Name and one Form. He is all Names and all Forms. All Names are His; all forms are His. Your names too are His, you are His Forms. You appear as separate individual bodies because the eye that sees them seeks only bodies, the outer encasement. When you clarify and sanctify your vision and look at them through the Atmic eye, the eye that penetrates behind the physical (with all its attributes and accessories), then you will see others as waves on the ocean of the Absolute, as the "thousand heads, the thousand eyes, thousand feet" of the Virat Purusha (Supreme Sovereign Person) sung in the Rigveda. Strive to win that Vision and to saturate yourself with that Bliss. (Divine Discourse, Apr 01, 1975)
ALL OF YOU ARE SPARKS OF THE DIVINE! - BABA
இறைவனை ஒரே ஒரு நாமம் மற்றும் ரூபத்தோடு மட்டுமே இனம் கண்டு கொள்ள முடியாது. அவனே அனைத்து நாமங்களும், ரூபங்களும் ஆவான். அனைத்து திருநாமங்களும் அவனுடையதே; அனைத்து ரூபங்களும் அவனுடையதே. உங்களது நாமங்களும் கூட அவனுடையதே; நீங்களும் அவனது ரூபங்களே. நீங்கள் தனித்தனி உடல்களாகத் தோன்றுகிறீர்கள், ஏனென்றால் அவற்றைக் காணும் கண் வெளிப்புற உறையான உடல்களை மட்டுமே நாடுகிறது. எப்போது நீங்கள் உங்களது கண்ணோட்டத்தை தெளிவாக்கி, புனிதமாக்கிக் கொண்டு, பௌதீகமானவற்றைத் (அதன் அனைத்து குணங்கள் மற்றும் பாகங்களுடன்) துளைத்துச் செல்லும் ஆத்ம கண்ணின் மூலம் அவர்களைப் பார்க்கிறீர்களோ, பின்னர், பரப்ரம்மம் எனும் சாகரத்தின் மேல் உள்ள அலைகளாகவும், ரிக் வேதம் கூறும் ,’’ ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் பாதங்கள்’’ கொண்ட விராட் புருஷனாகவும் அவர்களைக் காண்பீர்கள். அந்தக் கண்ணோட்டத்தைப் பெற்று அந்த ஆனந்தத்தில் உங்களையே தோய்த்திருக்கப் பாடுபடுங்கள்.
நீங்கள் அனைவருமே தெய்வீகத்தின் கீற்றுக்களே !- பாபா.