azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 15 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 15 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
There are three types of minds: (1) minds like ginned cotton, ready to receive the spark of highest wisdom and to give up in one instant blaze, the weakness and prejudices of ages, (2) minds like dry wood, who succeed but only after some little time, and (3) minds, like green logs, which resist the onslaught of the fire of jnana with all their might. Herds of cattle run towards a mirage to slake their thirst, but you ought to be wiser. You have discrimination (viveka), and renunciation (vairagya); you can detach yourselves consciously from pursuits which you discover as deleterious. Sit quiet for a few minutes and ponder over the fate of those who run towards the mirage. Are they happy? Do they have the strength to bear distress and distinction with equanimity? Have they a glimpse of the beauty, the truth, and the grandeur of the Universe which is the handiwork of God? -Divine Discourse, Jan 13, 1965.
IT IS ONLY WHEN WE PURIFY OUR HEART THAT GOD WILL BE ABLE TO ENTER IT.
A PEACEFUL MIND IS THE ABODE OF LOVE. - BABA
மூன்று விதமான மனங்கள் இருக்கின்றன. 1) பல யுகங்களாக இருந்து வந்த பலவீனங்கள் மற்றும் தப்பெண்ணங்களை கணப்பொழுதில் தீக்கிரையாக்கி விட்டு, மிக உயர்ந்த ஞான ஜோதியைப் பெறத் தயாராக இருக்கும் இலவம் பஞ்சு போன்ற மனங்கள். 2) சிறிது காலத்திற்குப் பிறகு மட்டுமே வெற்றி பெறும் உலர்ந்த மரக்கட்டைகளைப் போன்ற மனங்கள் மேலும் 3) ஞானத்தீயின் தாக்குதலை, தங்களது முழு வலிமையுடன் எதிர்க்கும் பச்சை மரக்கட்டைகளைப் போன்ற மனங்கள். கால்நடை மந்தைகள் தங்களது தாகத்தைத் தணித்துக் கொள்ள கானல் நீரை நோக்கி ஓடுகின்றன, ஆனால் நீங்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். உங்களிடம் விவேகமும் (பகுத்தறிவு), வைராக்யமும் (பற்றின்மை) இருக்கின்றன; தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று கண்டறிந்த தேடுதல்களிலிருந்து, மனம் விரும்பி நீங்கள் உங்களை விலக்கிக் கொள்ள முடியும். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து, கானல் நீரை நோக்கி ஓடுபவர்களின் தலை விதியைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் சந்தோஷமாகவா இருக்கிறார்கள்? வெற்றியையும், தோல்வியையும் சமச்சீரான மனப்பாங்குடன் சகித்துக் கொள்ளும் வலிமை அவர்களிடம் இருக்கிறதா? இறைவனின் கை வண்ணமான இந்த பிரபஞ்சத்தின் சத்தியம், சிவம் மற்றும் சுந்தரத்தின் ஒரு கண நேரக் கண்ணோட்டமாவது அவர்களுக்கு இருக்கிறதா?
நாம் , நம் இதயத்தைப் பரிசுத்தப் படுத்திக் கொண்டால் மட்டுமே, இறைவன் அதில் உள்ளே நுழைய முடியும்- ஒரு சாந்தமான மனமே, ப்ரேமையின் இருப்பிடமாகும்-பாபா