azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Education is not to be taken as a process of filling an empty sack and pouring out its contents, making its sack empty again. It is not the head that has to be filled through education, it is the heart that has to be cleansed, expanded and illumined. Education is for life, not a living. The sign of the educated man is the humility, that he has not been able to know the vast unknown that still remains to be explored. The educated man must realise that he has more obligations than privileges, more duties than rights. He has to serve the society amidst which he is placed and the heritage that has been handed over by forefathers. He should be delighted to serve and not desire to dominate. For, service is divine; service makes life worthwhile. Service is the best way to use one’s skills, intelligence, strength and resources. (Divine Discourse, Apr 01, 1973)
YOU ARE ALL CASKETS OF DIVINE LOVE; SHARE IT, SPREAD IT, EXPRESS THAT LOVE IN ACTS OF SERVICE, WORDS OF EMPATHY AND COMPASSIONATE ACTS. - BABA
கல்வி என்பதை, ஒரு காலி சாக்கு மூட்டையை நிரப்பி விட்டு, பின் அதைக் கொட்டிக் கவிழ்த்து மீண்டும் காலி செய்யும் ஒரு முறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.கல்வியின் மூலம் நிரப்பிக் கொள்ள வேண்டியது தலையை அல்ல; அதன் மூலம் இதயத்தைத் தூய்மைப் படுத்தி, விசாலமாக்கி, பிரகாசமாக்கிக் கொள்ள வேண்டும். கல்வி என்பது வாழ்க்கைக்கே அன்றி, ஒரு வாழ்க்கை நடத்துவதற்கு பொருள் ஈட்டுவதற்காக அல்ல. இன்னும் ஆராயப்பட வேண்டிய பரந்து விரிந்த தெரியாதவற்றை அவன் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற பணிவே, கல்வி கற்றவனின் அறிகுறி ஆகும். படித்த மனிதன், அவனுக்கு சலுகைகளை விட அதிகம் பொறுப்புக்களும், உரிமைகளை விட அதிகமான கடமைகளும் இருக்கின்றன என்பதை உணர வேண்டும். அவன் தான் வாழும் சமுதாயத்திற்கும், மூதாதையர்கள் அளித்துச் சென்ற பாரம்பரியத்திற்கும் சேவை ஆற்ற வேண்டும்.அவன் அதிகாரம் செலுத்த விரும்பாது, சேவை செயவதில் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஏனெனில், சேவை தெய்வீகமானது சேவையே வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக்குகிறது. ஒருவரது திறன்கள், புத்தி கூர்மை, வலிமை மற்றும் வளங்களை பயன்படுத்த, சேவையே மிகச் சிறந்த வழியாகும்.
நீங்கள் அனைவரும் தெய்வீக ப்ரேமையின் பெட்டகங்களே; அதைப் பகிர்ந்து கொண்டு, பரப்பி, அந்த ப்ரேமையை,கனிவான வார்த்தைகளிலும், கருணை நிறைந்த சேவைப் பணிகளிலும் வெளிப்படுத்துங்கள் - பாபா