azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 01 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 01 Feb 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Life is like a train journey. Young children have a long way to go, but elders have to alight from the train pretty soon. You must learn to make your journey comfortable and happy. Do not carry heavy unwanted luggage with you. That will make the journey miserable. Do not indulge in fault finding and in picking quarrels with others. Don't desire to have the best things for yourselves only. Share with others around you the good things you are given. Anger, hatred, envy, jealousy - these are the heavy luggage I asked you to avoid taking with you on the journey. I must give the elders and parents some advice. Do not set bad examples for these children to follow. If you are truthful, just, calm under provocation and full of love in all your dealings with others, then children too will grow up in Sathya (truth), Dharma (righteousness), Shanti (peace) and Prema (love). (Divine Discourse, Jan 6, 1975)
GOD IS LOVE. GOD IS PEACE. GOD IS STRENGTH - BABA
வாழ்க்கை ஒரு ரயில் பயணம் போன்றது. இளம் குழந்தைகள் வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளது; முதியவர்கள் வெகு விரைவில் ரயிலில் இருந்து இறங்கியே ஆக வேண்டும். நீங்கள் உங்கள் பயணத்தை சௌகரியமானதாகவும், சந்தோஷமானதாகவும் ஆக்கிக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். தேவையற்ற பளுவான சுமையை உங்களுடன் எடுத்துக் கொண்டு செல்லாதீர்கள். அது உங்கள் பயணத்தை துன்பகரமானதாக ஆக்கி விடும். குறை கண்டு பிடிப்பது மற்றும், பிறருடன் சண்டை போடுவது ஆகியவற்றில் ஈடுபடாதீர்கள். சிறந்த பொருட்கள் உங்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என ஆசைப் படாதீர்கள். உங்களுக்குக் கொடுக்கப் பட்ட நல்ல பொருட்களை உங்களைச் சுற்றி உள்ள பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தப் பயணத்தில் எடுத்துக் கொண்டு செல்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும் என நான் கூறும் பளுவான சுமைகள், கோபம், த்வேஷம், பொறாமை போன்றவையே . முதியவர்கள் மற்றும் பெற்றோருக்கு நான் சில அறிவுரையை அளித்தே ஆக வேண்டும். இந்தக் குழந்தைகள் பின்பற்றி விடக் கூடிய கெட்ட உதாரணங்களாக இருக்காதீர்கள். நீங்கள் உண்மையானவர்களாக நியாயமானவர்களாக, தூண்டப்பட்டாலும் கூட அமைதி காப்பவர்களாக, பிறருடன் நடந்து கொள்வதில் எல்லாம் ப்ரேமை நிறைந்தவர்களாக இருந்தால், குழந்தைகளும் கூட, சத்யம், தர்மம், சாந்தி மற்றும் ப்ரேமையில் வளருவார்கள்.
இறைவனே ப்ரேமை, இறைவனே சாந்தி, இறைவனே சக்தி. - பாபா