azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 30 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 30 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Good ideas have to be accepted and bad ones eschewed. Each idea has to be judged in the Supreme Court of Viveka (Wisdom). And the ruling has to be treated as inviolable. It is in this context that we have to remind ourselves of the prayer of Gandhiji, Sabko sanmati de Bhagwan - "O God, Bestow right understanding on all." Again, the individual born in the lake of society must swim and float in the calm waters, and joining the river of progress, merge in the ocean of grace. Man has to move from the stance of "I" to the position of "We"; this day, we see only the wild dance of ego-stricken individuals, who hate society and behave most unsocially. Water flows from a higher level to the lower levels. God's Grace too is like that. It flows down to those who are bent with humility. So, give up ego, overcome jealousy, and cultivate love. (Divine Discourse, Mar 30, 1973)
IT IS ONLY WHEN WE PURIFY OUR HEART THAT GOD WILL BE ABLE TO ENTER IT.
A PEACEFUL MIND IS THE ABODE OF LOVE. - BABA
நல்ல கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும்; தீய கருத்துக்கள் தவிர்க்கப் பட வேண்டும். ஒவ்வொரு கருத்தும் விவேகம் என்ற உச்ச நீதி மன்றத்தில் கணிக்கப் பட வேண்டும். மேலும் அந்தத் தீர்ப்பை மீற முடியாத ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.இந்த சந்தர்ப்பத்தில், நாம் மகாத்மா காந்தியின் பிரார்த்தனையான,‘’ ஸப்கோ ஸன்மதி தே பகவான் – இறைவா , அனைவருக்கும் நல்ல புத்தியை அருள்வாயாக‘’ என்பதை நாம் நமக்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். சமுதாயம் எனும் ஏரியில் பிறந்த ஒருவர், அமைதியான தண்ணீரில் நீந்தி, மிதந்து, முன்னேற்றம் என்ற நதியில் இணைந்து, இறை அருள் எனும் கடலில் இரண்டறக் கலக்க வேண்டும். மனிதன், ‘’ நான்’’ என்ற நிலையிலிருந்து ‘’நாம்’’ என்ற நிலைக்கு நகர வேண்டும்; இன்றோ, சமுதாயத்தை வெறுத்தும் சமூக நல்லிணக்கமின்றியும் இருக்கும் மிகவும் அகந்தை பிடித்த மனிதர்களின் வெறித்தனமான தாண்டவத்தைத் தான் காண்கிறோம். தண்ணீர் ஒரு உயர் நிலையிலிருந்து, தாழ்வான நிலைகளுக்குத் தான் பாய்கிறது.இறைவனது அருளும் கூட அப்படிப் பட்டதே.பணிவுடன் குனிந்து நிற்பவர்களை நோக்கி அது பாய்கிறது. எனவே, அகந்தையை விடுத்து, பொறாமையை வென்று, ப்ரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நாம் , நம் இதயத்தைப் பரிசுத்தப் படுத்திக் கொண்டால் மட்டுமே, இறைவன் அதில் உள்ளே நுழைய முடியும்- ஒரு சாந்தமான மனமே, ப்ரேமையின் இருப்பிடமாகும்-பாபா