azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 27 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 27 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The great evil that undermines the units of this organisation is pride and jealousy that it engenders. When one person exudes the pride that he alone can sing bhajans well amongst the group, naturally others develop anger, jealousy, hate, malice, and other such deleterious traits. Spiritual pride is the most poisonous of all varieties of pride, it blinds and leads the person suffering from it into ruin. Beware of pride; be always aware that you are but instruments in My Divine Mission of Revival of Righteousness (Dharmasthapana). Try to be more and more efficient as such instruments. The Hand that wields the instrument knows how and when it has to be applied! Be righteous; avoid all prejudices against others on the basis of caste, creed, colour, mode of worship, status or degree of affluence. Love alone can root out the weed of pride from the heart. Love all, as so many forms of God, appearing in various roles. (Divine Discourse, Jan 13, 1970)
DO NOT LOOK DOWN UPON ANYONE; LOOK UPON ALL AS DIVINE AS YOU REALLY ARE. - BABA
இந்த அமைப்பின் பிரிவுகளை சீர் குலைக்கும் மிகப் பெரிய தீமை அது உருவாக்கும் தற்பெருமை மற்றும் பொறாமை ஆகும். எப்போது ஒருவர், ஒரு குழுவில், தான் மட்டுமே நன்றாக பஜனை பாட முடியும் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறாரோ, அப்போது இயல்பாகவே மற்றவர்கள், கோபம், பொறாமை, த்வேஷம், வன்மம் போன்ற தீங்கு விளைவிக்கும் பண்புகளை வளர்த்துக் கொண்டு விடுவார்கள். அனைத்து விதமான கர்வங்களிலும், ஆன்மிக கர்வமே மிகவும் விஷமயமானதாகும்; அதனால் பாதிக்கப்பட்ட ஒருவரை, அது குருடாக்கி, அழிவிற்கு இட்டுச் செல்கிறது. தற்பெருமையைக் குறித்து விழிப்புடன் இருங்கள்.என்னுடைய தர்மஸ்தாபனம் அதாவது தர்மத்தை நிலை நாட்டுவது என்ற தெய்வீகப் பணியில் நீங்கள் கருவிகளே அன்றி வேறில்லை என்ற விழிப்புணர்வில் எப்போதும் இருங்கள். இப்படிப் பட்ட கருவிகளாக, மேலும் மேலும் திறமை படைத்தவர்களாக இருக்க முயலுங்கள். கருவியைக் கையாளும் கரத்திற்கு அதை எப்படி மற்றும் எங்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும்! தார்மீகமாக இருங்கள்; சாதி, மதம், நிறம், வழிபாட்டு முறை, அந்தஸ்து அல்லது செல்வத்தின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவர்களுக்கு எதிரான அனைத்து தப்பெண்ணங்களையும் தவிர்த்து விடுங்கள். ப்ரேமை மட்டுமே, தற்பெருமையின் களைகளை இதயத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிய வல்லதாகும். வெவ்வேறு வேடங்களில் தோன்றும் இறைவனின் பல ரூபங்களாகக் கருதி, அனைவரையும் நேசியுங்கள்.
யாரையும் தாழ்வாக நோக்காதீர்கள்; உண்மையில் நீங்கள் எப்படி தெய்வீகமானவர்களோ, அனைவரையும் அவ்வாறே காணுங்கள்- பாபா