azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 19 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 19 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

It is true that health is wealth. Dharmarthakamamokshanam arogyam moolamutthamam - Health is the fundamental requirement to achieve the four goals of human life, namely, dharma (righteousness), artha (wealth), kama (desire) and moksha (liberation). However, once you attain the state of bliss, you can always enjoy good health. Man is deluded with the feeling that he can lead a blissful life by acquiring wealth and position of authority. Neither wealth nor position of authority can confer bliss on you. Bliss can be experienced only when you visualise unity in diversity. If you do not understand the principle of unity and attain bliss, all the service activities like construction of hospitals will be of little consequence. Everyone working in a hospital, be they doctors, nurses, paramedical staff or technicians, should have the spirit of unity. This hospital demonstrates the ideal of unity. All the staff in this hospital work with the feeling that they belong to one family. (Divine Discourse, Aug 22, 2000)
ONE SHOULD MAKE EFFORTS TO VISUALISE UNITY IN DIVERSITY AND THEREBY ATTAIN DIVINITY. - BABA
ஆரோக்யமே உண்மையான செல்வம் என்பது உண்மையே. தர்மார்த்த காம மோக்ஷணம் ஆரோக்யம் மூலமுத்தமம்- மனித வாழ்க்கையின் நான்கு புருஷார்த்தங்களான தர்மம், அர்த்தா (செல்வம்), காமம் (ஆசை) மற்றும் மோக்ஷம் ஆகியவற்றைப் பெறுவதற்கு அடிப்படைத் தேவை ஆரோக்யமே. இருந்தாலும் ஒரு முறை நீங்கள் பேரானந்த நிலையை அடைந்து விட்டால், நீங்கள் எப்போதுமே நல்ல ஆரோக்யத்தை அனுபவிப்பீர்கள். மனிதன் செல்வத்தையும், அதிகாரப் பதவியையும் பெற்று விட்டால் ஒரு ஆனந்தமான வாழ்க்கையை நடத்த முடியும் என்ற உணர்வால் மயக்கப் படுகிறான். செல்வமோ அல்லது அதிகாரப் பதவியோ உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்க முடியாது. நீங்கள் வேற்றுமையில் ஒற்றுமையைக் காண முடிந்தால் மட்டுமே, ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.இந்த ஒருமை தத்துவத்தைப் புரிந்து கொண்டு, ஆனந்தத்தை அடையவில்லை என்றால்,மருத்துவ மனைகளைக் கட்டுவது போன்ற சேவைப் பணிகளுக்கு எந்த அர்த்தமும் இருக்காது. மருத்துவ மனையில் பணி புரியும் ஒவ்வொருவரும், அவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், வைத்தியத் துணைப்பணியாளர்கள் அல்லது பொறியாளர்கள் என யாராக இருந்தாலும்,ஒற்றுமை உணர்வோடு இருக்க வேண்டும்.இந்த மருத்துவ மனை ஒற்றுமை இலட்சியத்தை எடுத்துக் காட்டுகிறது. இந்த மருத்துவ மனையில் பணி புரியும் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வோடு பணி புரிகிறார்கள்.
ஒருவர் வேற்றுமையில் ஒற்றுமையைக் காண முயற்சிகள் செய்து,
அதன் மூலம் தெய்வீகத்தை அடைய வேண்டும் -பாபா