azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 16 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 16 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Penance does not mean retiring to the forest and living on fruits and tubers. In fact such a life can be called a life of tamas (dullness) not penance (tapas). True penance lies in controlling one’s emotions, thoughts, words and deeds arising out of satwic, rajasic and tamasic qualities. One should contemplate on God at all times and achieve harmony in thoughts, words and deeds. He alone is a noble one, whose thoughts, words and deeds are in complete harmony. Do not be carried away by pain or pleasure. Bhagavad gita teaches: Sukha Dukhe Same Kruthwaa Labhaa Labhou Jaya Jayou - One should be even minded in happiness or sorrow, gain or loss, victory or defeat. One should discharge one’s duty and serve society without any expectation of reward. Such even mindedness and desireless state is true penance. (Divine Discourse, Aug 22, 2000)
IN THIS WORLD, THERE IS NO PENANCE (TAPAS) HIGHER THAN FORTITUDE, NO HAPPINESS GREATER THAN CONTENTMENT, NO GOOD DEED (PUNYA) HOLIER THAN MERCY, AND NO WEAPON MORE EFFECTIVE THAN PATIENCE. - BABA
தவம் என்றால் காட்டிற்குச் சென்று பழங்கள் மற்றும் கிழங்குளை உண்டு வாழ்வது என்று பொருளல்ல. உண்மையில் இப்படிப் பட்ட வாழ்க்கையை, ஒரு தமஸான வாழ்க்கை என்று கூறலாமே தவிர, தவம் என்று அல்ல. ஸாத்வீக, ரஜோ மற்றும் தாமஸ குணங்களினால் எழும் ஒருவரது உணர்வுகள், சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் தான் உண்மையான தவம் இருக்கிறது.ஒருவர் எல்லாக் காலங்களிலும் இறைவனை தியானித்து, சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களில் இசைவை அடைய வேண்டும்.எவரது சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்கள் பரிபூரணமான இசைவுடன் இருக்கின்றனவோ அவர் மட்டுமே ஒரு சீரியவராவார்.துன்பம் அல்லது இன்பத்தினால் நிலை குலைந்து விடாதீர்கள். ஸ்ரீமத் பகவத் கீதை- சுக துக்க ஸமே க்ருத்வா லாபா லாபௌ ஜயா ஜயௌ- ஒருவர் சுகம் அல்லது துக்கம், லாபம் அல்லது நஷ்டம், வெற்றி அல்லது தோல்வி என்ற எல்லாவற்றிலும் சமச்சீரான மனப்பாங்குடன் இருக்க வேண்டும் என போதிக்கிறது. ஒருவர் தனது கடமையை ஆற்றி, எந்த விதமான பரிசின் எதிர்பார்ப்பும் இன்றி சமுதாயத்திற்குச் சேவை ஆற்ற வேண்டும். இப்படிப் பட்ட சமச்சீரான மனப்பாங்கு மற்றும் ஆசையின்மையே உண்மையான தவமாகும்.
இந்த உலகில் சகிப்புத் தன்மையை விட உயர்ந்த தவமோ, திருப்தியை விடச் சிறந்த சந்தோஷமோ, கருணையை விடப் புனிதமான புண்ணியமோ, பொறுமையை விட அதிகப் பயனுள்ள ஆயுதமோ இல்லை- பாபா