azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 15 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 15 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

You must fill yourself with holy thoughts. That is the purpose of sacred festivals. Sankramana is the time when the inward journey towards a pure and unsullied heart is made. Just as the Sun embarks on his northward journey, Sankranti is the day on which the intellect should be turned towards the Atma for Self-Realisation. Men and women have to change their vision, their thoughts, their words and their conduct. This is the meaning of Sankramana. Unless you purify yourself, what can any number of Sankrantis mean to you? Sankranti promotes mental transformation. It illuminates the minds of people. It induces unfoldment of innermost feelings. It brings about the manifestation of the invisible Atma within everyone. Sankranti is pregnant with such immense significance. Sankranti should be hailed as the harbinger of unity and peace. This was an immemorial message of the Vedas. (Divine Discourse, Jan 15, 1996.)
LET US LIVE TOGETHER IN HARMONY AND STRIVE TOGETHER. - BABA
நீங்கள் உங்களையே புனிதமான சிந்தனைகளால் நிரப்பிக் கொள்ள வேண்டும். புனிதப் பண்டிகைகளின் நோக்கம் அதுவே. ஒரு பரிசுத்தமான மற்றும் களங்கமற்ற இதயத்தை நோக்கி, அகப்பயணம் செய்யும் காலமே ஸங்க்ரமண காலமாகும். எவ்வாறு சூரியன் அவனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறானோ, அவ்வாறே புத்தி ஆத்ம சாக்ஷாத்காரத்திற்காக, ஆத்மாவை நோக்கித் திருப்பப் பட வேண்டிய நாளே சங்கராந்தியாகும். ஆண்களும், பெண்களும்அவர்களது கண்ணோட்டம், அவர்களது சிந்தனைகள், அவர்களது சொற்கள் மற்றும் அவர்களது நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஸங்க்ரமண என்பதன் பொருள் அதுவே. நீங்கள் உங்களையே தூய்மைப் படுத்திக் கொள்ளாவிட்டால், எத்தனை எண்ணிக்கையிலான ஸங்கராந்திகள் உங்களுக்கு என்ன செய்ய முடியும்? ஸங்கராந்தி மன நல்மாற்றத்தை ஊக்குவிக்கிறது. அது மனிதர்களின் மனங்களைப் பிரகாசமாக்குகிறது. அது, அகமன ஆழத்தில் உள்ள உணர்வுகளை பரிமளிக்க உந்துகிறது. அது, ஒவ்வொருவருள்ளும் உள்ள கண்ணுக்குப் புலப்படாத ஆத்மாவின் வெளிப்பாட்டைக் கொண்டு வருகிறது. ஸங்கராந்தி என்பது இப்படிப் பட்ட பல மகத்தான முக்கியத்துவங்களால் நிரம்பிய ஒன்றாகும். ஒற்றுமை மற்றும் அமைதிக்கான முன்னோடி என சங்கராந்தி பாராட்டப்பட வேண்டும். இதுவே வேதங்களின் சாஸ்வதமான போதனையாகும்.
நாம் இசைவுடன் வாழ்ந்து ,ஒன்றாகப் பாடுபடுவோமாகுக- பாபா