azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 14 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 14 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Today is the Pongal festival in Tamil Nadu. It is the day of Uttarayana when the Sun turns daily more and more towards the north for a six-month period which is considered holier than the other six months. Pongal means boiling over, spilling over of milk, that is to say, the heart must spill over with delight at the great lessons that the Uttarayana teaches us. The Sun is the presiding deity of the eye as well as the intellect, and when the Sun turns north we must also decide to turn towards the holy path of God- realisation. When Arjuna and Duryodhana were together with Sri Krishna to seek his help during the Kurukshetra war, Arjuna chose the path of God while Duryodhana preferred the path of material power. The more riches you accumulate, the more bound you become, and the more worry, anxiety and fear you get into. If one has God on one side, what can one not achieve! (Divine Discourse, Jan 15, 1979)
THE BEST WAY TO GAIN HAPPINESS IS TO CHOOSE GOD AS THE LEADER AND GUIDE.
THEN, HE WILL GUIDE AND GUARD, FROM THE HEART ITSELF. - BABA
இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை. இன்றைய நாள் சூரியன் தினமும் மேலும் மேலும் அதிகமாக வடக்கு நோக்கித் திரும்பும் ஒரு ஆறு மாத காலமும், மற்றைய ஆறு மாதங்களை விடப் புனிதமாகக் கருதப்படும் உத்தராயண புண்யகாலமும் ஆகும். பொங்கல் என்றால், பால் பொங்கி வருவது என்று பொருள்; அதாவது உத்தராயணம் போதிக்கும் மகத்தான பாடங்களினால் இதயம் களிப்புடன் பொங்க வேண்டும் என்பதாகும். சூரியன், கண்கள் மற்றும் புத்திக்கு அதிபதி ஆவான்; அந்த சூரியன் வடக்கு நோக்கித் திரும்பும் போது, நாமும் கூட, இறைவனை உணர்தல் என்ற புனிதப் பாதையை நோக்கித் திரும்ப முடிவு செய்ய வேண்டும். அர்ஜூனனும், துரியோதனனும் சேர்ந்து குருக்ஷேத்திரப் போருக்கு அவரது உதவியை நாடி பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருந்த போது, அர்ஜூனன் இறைவனின் பாதையைத் தேர்ந்தெடுக்க, துரியோதனன் உலகியலான சக்தியை விரும்பினான். எவ்வளவு அதிகமாக நீங்கள் சொத்துக்களை குவிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் கட்டுண்டு, மேலும் அதிகமான கவலை, கலக்கம் மற்றும் அச்சத்திற்கு உள்ளாவீர்கள். இறைவன் ஒருவன் பக்கம் இருப்பானானால், அவன் எதைத் தான் சாதிக்க முடியாது!
சந்தோஷத்தைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழி இறைவனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் தேர்ந்தெடுப்பதே. பின்னர், இதயத்தில் இருந்து கொண்டே அவன் உங்களை வழி நடத்திக் காத்திடுவான் - பாபா