azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 11 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 11 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

A true student is one who achieves excellence in the moral, social and spiritual fields. One should not strive for physical strength and happiness alone. One should strive hard for the control of the mind. One who becomes a slave to one’s mind is bound to become weak, however powerful one may be. So, you should make the mind your slave. The power of mind is matchless. It is from the mind that the most precious virtues originate. If wealth is lost, it can be earned again. If health is lost, it can be restored with the help of an efficient doctor. But if human values are lost, human life becomes a waste. Human values are the need of the hour. They cannot be acquired solely from sacred texts nor can they be passed on by learned preceptors. They originate from within. When we develop noble thoughts and follow the path of truth in our daily life, human values will blossom in us and protect us under all circumstances. (Divine Discourse, Jan 14, 2003)
IF WEALTH IS LOST, NOTHING IS LOST. IF HEALTH IS LOST, SOMETHING IS LOST.
IF CHARACTER IS LOST, ALL IS LOST. - BABA
தார்மீக, சமூக மற்றும் ஆன்மீக துறைகளில் சிறந்து விளங்குபவரே ஒரு உண்மையான மாணவர் ஆவார். ஒருவர் உடல் வலிமை மற்றும் சந்தோஷத்திற்காக மட்டுமே பாடுபடக் கூடாது. ஒருவர் மனக் கட்டுப்பாட்டிற்காகக் கடுமையாகப் பாடு பட வேண்டும். ஒருவர் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் கூட, மனதிற்கு அடிமையாக இருந்தால், கண்டிப்பாக பலஹீனராகி விடுவார்.எனவே, நீங்கள் மனதை உங்களது அடிமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும். மனதின் சக்தி இணையற்றது.மனதில் இருந்து தான் மிகவும் விலை மதிப்புள்ள சீலங்கள் உருவாகின்றன.செல்வத்தை இழந்து விட்டால், அதை மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்யத்தை இழந்து விட்டால், ஒரு திறமையான வைத்தியரைக் கொண்டு அதை மீட்டுக் கொள்ள முடியும். ஆனால், மனிதப் பண்புகளை இழந்து விட்டால்,மனித வாழ்க்கை வீணே. மனிதப் பண்புகளே இன்றைய கால கட்டத்தின் தேவைகளாகும். அவற்றைப் புனித நூல்களிலிருந்து மட்டுமே பெறவும் முடியாது அல்லது கற்றறிந்த குருமார்களால் எடுத்துத் தரவும் முடியாது.அவை அகத்திலிருந்து தோன்றுபவை. எப்போது நாம் சீரிய சிந்தனைகைள வளர்த்துக் கொண்டு, நமது அன்றாட வாழ்க்கையில் சத்தியத்தின் பாதையைப் பின்பற்றுகிறோமோ, மனிதப் பண்புகள் நம்முள் மலர்ந்து, நம்மை எல்லா சந்தர்ப்பங்களிலும் காப்பாற்றும்.
செல்வத்தை இழந்து விட்டால், ஒரு இழப்புமில்லை. ஆரோக்யத்தை இழந்து விட்டால், கொஞ்சம் இழப்பே. ஒழுக்கத்தை இழந்து விட்டால், அனைத்தும் இழப்பே- பாபா