azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 10 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 10 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
All objects in nature are transitory. They attract man and delude him. The objects that are temporary in nature will give only momentary happiness. The Vedas speak about the principle of ritam. It symbolises the truth that is changeless. All worldly objects undergo change. When you develop ritam, you will be able to understand the changeless and eternal Divinity. You may question, "How can I have the vision of God?" Oh man! You don't need to search for God! Wherever you see, He is there. He is imbued in every object. You are unable to see Him because you are deluded by external appearances. In fact, you are God yourself. Hence, the Veda exhorts man to develop faith that, "I am God and God is none other than myself." Names and forms are many, but God is one. Sarvam khalvidam Brahma (verily all this is Brahman). Such unity in Divinity has to be realised. Satsang means experience of unity. (Divine Discourse, Mar 1, 2003)
FULLNESS IN LIFE IS MARKED BY THE HARMONY OF THOUGHT, WORD AND DEED. - BABA
இயற்கையில் உள்ள அனைத்து பொருட்களும் தாற்காலிகமானவையே.அவை மனிதனை ஈர்த்து, மயக்கி விடுகின்றன.தாற்காலிகமான பொருட்கள், கண நேர சந்தோஷத்தை மட்டுமே தரும்.வேதங்கள் ரிதம் என்ற தத்துவத்தைப் பற்றிப் பேசுகின்றன.அது மாற்றமே இல்லாத சத்தியத்தைக் குறிக்கிறது. உலகியலான பொருட்கள் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.நீங்கள் ரிதத்தை வளர்த்துக் கொண்டால், உங்களால் மாற்றமே அற்ற, நிரந்தரமான தெய்வீகத்தைப் புரிந்து கொள்ள முடியும்.நீங்கள்,’’ நான் இறைவனது தரிசனத்தை எப்படிப் பெற முடியும்?’’ எனக் கேட்கக் கூடும். ஓ மனிதா! நீ இறைவனைத் தேட வேண்டிய அவசியமில்லை! நீங்கள் எங்கு நோக்கினும் அங்கு அவன் இருக்கிறான். அவன் ஒவ்வொரு பொருளிலும் ஊடுருவி நிற்கிறான். நீங்கள் வெளிப்புறத் தோற்றத்தினால் மயங்கி இருப்பதால், உங்களால் அவனைக் காண முடிவதில்லை.உண்மையில் நீங்களே இறைவன். எனவே தான் வேதம் , ‘’நானே இறைவன், இறைவன் என்னைத் தவிர வேறு எவருமில்லை‘’ என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுமாறு மனிதனை வற்புறுத்துகிறது. நாமங்களும் ரூபங்களும் பல, ஆனால் இறைவன் ஒருவனே. ஸர்வம் கல்விதம் ப்ரம்மா (அனைத்தும் பரப்பரம்மமே). தெய்வீகத்தின் இப்படிப் பட்ட ஒருமையை உணர வேண்டும்.ஸத்ஸங்கம் என்றால் ஒருமையை உணர்வதே ஆகும்.
சிந்தனை,சொல், மற்றும் செயலின் இசைவே,
வாழ்க்கையின் பரிபூரணத்துவத்தைக் குறிப்பதாகும் - பாபா