azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 09 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 09 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Remember in what spirit Hanuman, the monkey, served Sri Rama. Hanuman has been described as ‘tranquil, virtuous and strong.’ Such a person, when he was on a tree in the Ashokavana in Lanka, was questioned by the rakshasas (demons) as to who he was and where from he had come. Hanuman replied: "Dasoham Kausalendrasya (I am the servant of Sri Rama, the Son of Kausalya)”. He did not boast about his valour or knowledge. He was content to describe himself as the humble and devoted servant of Rama. Bear in mind the maxim, "Without being a kinkara (one who is ready to carry out the Lord's command), you cannot become Shankara (Divine)." You have to transform your life through service. You should give no room for arrogance or self-interest to the slightest extent in your service activities. Install in your heart the feeling that the service you render to anyone is service to God. Only then does service to man become service to Madhava (God). (Divine Discourse, Mar 23, 1989)
SEVA IS THE WORSHIP YOU OFFER TO GOD IN THE HEART OF EVERYONE. - BABA
குரங்கான ஹனுமான் எந்த உணர்வோடு ஸ்ரீராமருக்கு சேவை புரிந்தார் என்பதை எண்ணிப் பாருங்கள்.ஹனுமான், ‘’சாந்தமானவன், குணவான், பலவான் ‘’ என்று வர்ணிக்கப் படுகிறார். அசோக வனத்தில் ஒரு மரத்தில் இருந்த இப்படிப் பட்ட ஒருவர், அரக்கர்களால் அவர் யார் , எங்கிருந்து வந்தார் என்று கேட்கப்பட்ட போது, ஹனுமான், ‘’ தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய’’ (நான் கோசலையின் மைந்தனான ஸ்ரீராமரின் சேவகன்) என்று பதிலளித்தார். அவர் தனது வீரம் அல்லது பாண்டித்யத்தைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை.அவர் தன்னைத் தானே ஸ்ரீராமரின் ஒரு பணிவும் பக்தியும் கொண்ட ஒரு சேவகனாக வர்ணித்துக் கொள்வதோடு திருப்தி அடைந்து விட்டார். ‘’ ஒரு கிங்கரராக (இறைவனது ஆணையை நிறைவேற்றத் தயாராக இருக்கும் சேவகனாக) இல்லாமல், நீங்கள் சங்கரராக ( தெய்வீகமானவர் ) ஆக முடியாது ‘’ என்ற பழமொழியை மனதில் கொண்டு இருங்கள். நீங்கள் உங்களது சேவைப் பணிகளில் அகந்தை அல்லது சுயநலத்திற்கு ஒரு சிறிதளவு கூட இடம் கொடுக்கக் கூடாது. நீங்கள் எவருக்கும் ஆற்றும் சேவையும் இறைவனுக்கே ஆற்றுவதாகும் என்ற உணர்வை உங்கள் இதயத்தில் பதித்திருங்கள். அதன் பிறகே, மானவ சேவை , மாதவ சேவையாக ஆக முடியும்.
சேவை என்பது ஒவ்வொருவரது இதயத்திலும் வீற்றிருக்கும் இறைவனுக்கு நீங்கள் அர்ப்பணிக்கும் வழிபாடாகும்- பாபா