azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 08 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 08 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Embodiments of Love! Wherever you are, in whatever circumstances you are placed in, do not ever forget God. Sarvada sarva kaleshu sarvatra Hari chintanam (Always, at all times, under all circumstances contemplate on God). Whatever activity you undertake, dedicate it to God. All the powers in your body are the gifts of God. In fact, Divinity pervades every inch, every cell and every atom of your body. If you waste such a divine power, it amounts to sacrilege. Dedicate your body, mind, intellect; in fact, everything of yours, to God! The games you play should not be limited to one day. In fact, Life is a game; play it. Unity is divinity. Whatever you do, whatever you speak, whatever you think - in every aspect of your life - that unity must be reflected. That is the true culture of the Bharatiyas (Indians). (Divine Discourse, Jan 14, 2003)
FILL YOUR HEARTS WITH PURE LOVE AND SURRENDER TO GOD.
THEN, WHATEVER YOU EXPERIENCE, GOOD OR BAD IS A GIFT FROM GOD. - BABA
ப்ரேமையின் திருவுருவங்களே! நீங்கள் எங்கு இருந்தாலும்,எந்த சூழ்நிலையில் நீங்கள் வைக்கப்பட்டு இருந்தாலும், இறைவனை ஒருபோதும் மறக்காதீர்கள். ஸர்வதா ஸர்வ காலேஷூ ஸர்வத்ர ஹரி சிந்தனம் (எப்போதும், எல்லாக் காலத்திலும், அனைத்து சூழ்நிலைகளிலும் இறைவனை தியானியுங்கள்). நீங்கள் மேற்கொள்ளும் எந்தச் செயலாக இருந்தாலும், அதை இறைவனுக்கு அற்பணியுங்கள்.உங்கள் உடலில் உள்ள அனைத்து சக்திகளும் இறைவன் தந்த பரிசுகளே. உண்மையில், தெய்வீகம், உங்கள் உடலின் ஒவ்வொரு அங்குலத்திலும், ஒவ்வொரு திசுவிலும், ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி உள்ளது. உண்மையில் நீங்கள் இப்படிப் பட்ட ஒரு தெய்வீக சக்தியை வீணடித்தால், அது தெய்வ நிந்தனைக்கு ஒப்பாகும்.உங்களது உடல், மனம், புத்தி, ஏன் உண்மையில் உங்களது அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணியுங்கள்! நீங்கள் ஆடுகின்ற விளையாட்டுக்கள் ஒரு நாளோடு மட்டும் இருக்கக் கூடாது. உண்மையில் வாழ்க்கையே ஒரு விளையாட்டுத் தான்; அதை விளையாடுங்கள். ஒற்றுமையே தெய்வீகம். நீங்கள் எதைச் செய்தாலும், எதைப் பேசினாலும், எதைச் சிந்தித்தாலும்- உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், அந்த ஒற்றுமை பிரதிபலிக்க வேண்டும்.அதுவே பாரதீயர்களின் உண்மையான கலாசாரம் ஆகும்.
உங்கள் இதயங்களை பரிசுத்தமான ப்ரேமையினால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர், நீங்கள் அனுபவிப்பது, நல்லதோ அல்லது கெட்டதோ, எதுவானாலும் அது இறைவனது ஒரு பரிசாகி விடும்- பாபா