azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 07 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 07 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The Bal Vikas is the primary basis of the great movement to restore dharma (righteousness) in the world. The elders are far gone in their ways, and it is difficult to expect change in their habits and attitudes. Children have to be led into good ways of living, into simplicity, humility and discipline. Through the example of bright, cheerful and cooperating children from the Bal Vikas classes, many parents have to be persuaded lovingly to send their children also to these classes. As you know, you cannot draw children to your side if you hold a stick in your hand; you will have to hold some sweets instead. So the Gurus have to be embodiments of love and patience. The ideal of the Bal Vikas is to raise a generation of boys and girls who have a clean and clear conscience. The actual syllabus is not so important as the creation of an atmosphere where noble habits and ideals can grow and fructify. (Divine Discourse, Jun 6, 1978)
REMEMBER THAT AS GURUS, YOU TOO HAVE A GURU GUIDING YOU AND OVERSEEING YOUR SERVICE.SO YOU TOO ARE PUPILS, AND YOU TOO LEARN THE LESSONS OF EQUALITY, EQUANIMITY AND SELFLESS LOVE WHILE ACTING AS GURUS. - BABA
இந்த உலகில், தர்மத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்கான மாபெரும் இயக்கத்தின் முதன்மை அடிப்படையே பால்விகாஸ். வயதானவர்கள் அவர்களது வழிகளில் வெகு தூரம் சென்று விட்டார்கள்;அவர்களது பழக்கங்கள் மற்றும் மனப்பாங்குகளில் மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினமே. குழந்தைகளை நல்ல வழிகளில் வாழ்வது,எளிமை, பணிவு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றில் இட்டுச் செல்ல வேண்டும். பால் விகாஸ் வகுப்புகளில் இருந்து பிரகாசமான, மகிழ்ச்சியான மற்றும் ஒத்துழைக்கும் குழந்தைகளின் உதாரணம் மூலம், பல பெற்றோர்களையும், அவர்களது குழந்தைகளையும் கூட இந்த வகுப்புகளுக்கு அனுப்ப அன்புடன் வற்புறுத்த வேண்டும்.உங்கள் கையில் கழியை வைத்துக் கொண்டு இருந்தால், குழந்தைகளை உங்கள் பக்கம் ஈர்க்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்; அதற்கு பதிலாக, உங்கள் கையில் சில இனிப்புகளை வைத்திருக்க வேண்டும். எனவே, குருமார்கள், ப்ரேமை மற்றும் பொறுமையின் திருவுருவங்களாக இருக்க வேண்டும்.பால விகாஸின் இலட்சியம், ஒரு பரிசுத்தமான மற்றும் தெளிவான மனச்சாட்சி உள்ள பையன்கள் மற்றும் பெண்களைக் கொண்ட ஒரு தலைமுறையை வளர்ப்பது தான். உன்னதமான பழக்க வழக்கங்கள் மற்றும் இலட்சியங்கள் வளர்ந்து வளரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதை விட, அசல் பாடத்திட்டம் அவ்வளவு முக்கியமானதல்ல.
குருமார்களாக,உங்களுக்கும், உங்களை வழி நடத்தி, உங்களது சேவையை மேற்பார்வை செய்யும் ஒரு குரு இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நீங்களும் கூட மாணவர்களே; குருமார்களாக செயல்படும் போது நீங்களும் சமத்துவம்,சமச்சீரான மனப்பாங்கு மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் பாடங்களைக் கற்றுக் கொள்கிறீர்கள்- பாபா