azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 05 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 05 Jan 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Divinity is present in everyone in an unmanifested form. Every man is the embodiment of the Divine Sat-Chit-Ananda (Being-Awareness-Bliss). This has been described categorically in the Bhagavad Gita. As God is the embodiment of love, man is also an embodiment of love. But man today does not manifest it fully and properly because of his selfishness and self-centredness. Though humanity has advanced considerably in the material and scientific spheres, it has gone down grievously morally and spiritually. Selfishness is predominant in every action. Behind every thought and every word, self-interest is prominent. It is only when this selfishness is eradicated can Divinity reveal itself. In rendering Seva (service), there should be a recognition of the omnipresence of the Divine in all human beings. Men have not developed the spirit of Tyaga (sacrifice) or aversion to Bhoga (sensual pleasures). True service calls for a spirit of sacrifice. Sacrifice has been declared to be the only means to achieve immortality. (Divine Discourse, Mar 23, 1989)
THE BODY WILL SHINE IF THE CHARACTER IS FINE. SERVICE OF MAN AND
WORSHIP OF GOD WILL PRESERVE ITS CHARM. - BABA
தெய்வீகம் என்பது ஒவ்வொருவருள்ளும் ஒரு வெளிப்படாத உருவில் உள்ளது . ஒவ்வொரு மனிதனும் சச்சிதானந்த ஸ்வரூபமே. இது அழுத்தம் திருத்தமாக ஸ்ரீமத் பகவத் கீதையில் விவரிக்கப் பட்டுள்ளது.இறைவன் எவ்வாறு ப்ரேமையின் திருவுருவமோ, மனிதனும் கூட ப்ரேமையின் ஒரு திருவுருவமே. ஆனால், இன்று மனிதன், அவனது சுயநலத்தின் காரணமாக, முழுமையாகவோ அல்லது முறையாகவோ அதை வெளிப்படுத்துவதில்லை. மனிதகுலம் பொருட்களாலான மற்றும் விஞ்ஞானத் துறையில் கணிசமாக முன்னேறி இருந்தாலும் கூட, ஒழுக்கம் மற்றும் ஆன்மிக ரீதியாகக் கடுமையாக வீழ்ச்சி அடைந்து விட்டது. ஒவ்வொரு செயலிலும் சுயநலமே பிரதானமாக இருக்கிறது. ஒவ்வொரு சிந்தனை மற்றும் சொல்லின் பின்னால் சுயநலமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.இந்த சுயநலம் நீக்கப் பட்டால் மட்டுமே தெய்வீகம் தானே வெளிப்பட முடியும்.சேவை ஆற்றும் போது,அனைத்து மனிதருள்ளும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீகத்தைப் பற்றிய ஒரு உணர்வு இருக்க வேண்டும்.மனிதன் தியாக உணர்வையோ அல்லது போகத்தின் (புலனின்பம்) மீது வெறுப்பையோ வளர்த்துக் கொள்ளவில்லை. உண்மையான சேவைக்கு ஒரு தியாக உணர்வு தேவை. தியாகமே, அமரத்துவத்தை அடைவதற்கான ஒரே வழியாக பறைசாற்றப்பட்டுள்ளது.
குணநலன்கள் சிறப்பாக இருந்தால், உடலும் ஓளி விட்டுத் திகழும். மனித சேவையும், மாதவ வழிபாடும் அதன் வசீகரத்தைப் பேணிக் காக்கும். -பாபா