azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 27 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 27 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Transcend anekatwa bhava (the feeling of multiplicity) and cultivate ekatwa bhava (the feeling of oneness), that will end strife, grief, pain and pride. See all as expressions of the same God, as appearances on the same screen, and as bulbs lit by the same current, though of manifold colours and wattage. Feel that you and they are able to talk and walk, and think and act because of the God within. Differences that strike you while you cast your eyes are illusory; you have not yet developed the vision that makes you apprehend the unity which is the truth of all the seeming diversity, that is all! The fault is in you, not the world. The world is One; but, each takes it to mean what pleases one most! The world is One, but, each sees it from one’s own angle and so, it appears as if it has multiple faces. (Divine Discourse, May 10, 1969)
WHEN THE INDIVIDUAL UNDERSTANDS THE PRINCIPLE OF UNITY IN DIVERSITY,
THE ‘CONSCIENCE’ GETS TRANSFORMED INTO ‘CONSCIOUSNESS’. - BABA
அநேகத்வ பாவத்தைக் (வேற்றுமை உணர்வை) கடந்து, ஏகத்வ பாவத்தை (ஒற்றுமை உணர்வை) வளர்த்துக் கொள்ளுங்கள்; அது போராட்டம்,துன்பம் மற்றும் தற்பெருமை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வந்து விடும். அனைத்தையும் ஒரே இறைவனின் வெளிப்பாடாகவும், ஒரே திரையில் தோன்றும் காட்சிகளாகவும், பலவித வண்ணங்கள் மற்றும் வாட்டேஜூகளைக் கொண்டவையாக இருந்தாலும், ஒரே மின்சாரத்தால் ஒளி விடும் மின் விளக்குகளாகவும் கருதுங்கள். நீங்களும், அவர்களும், பேசவோ மற்றும் நடக்கவோ, சிந்திக்கவோ மற்றும் செயல்படவோ முடிவதெல்லாம், உள்ளுறையும் தெய்வீகத்தினாலேயே தான்.உங்கள் கண்களுக்குத் தோன்றும் வேற்றுமைகள் எல்லாம் மாயையே; இந்த அனைத்து வேற்றுமையாகத் தோற்றமளிப்பவற்றின் சத்யமான, ஒற்றுமையைப் புரிந்து கொள்வதற்கான கண்ணோட்டத்தை நீங்கள் இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை அவ்வளவு தான் ! குறை உங்களிடமே அன்றி, உலகத்தில் அல்ல.உலகம் ஒன்று தான்; ஆனால் ஒவ்வொருவரும், தங்களுக்கு எது அதிகமாகப் பிடித்திருக்கிறதோ, அவ்வாறே அது இருப்பதாக அர்த்தம் செய்து கொள்கிறார்கள். உலகம் ஒன்று தான், ஆனால், ஒவ்வொருவரும் அவரவரது கோணத்திலிருந்து பார்க்கிறார்கள்; எனவே, அது பலவிதமான முகங்களைக் கொண்டதாகத் தோன்றுகிறது.
எப்போது ஒருவர் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தைப் புரிந்து கொள்கிறாரோ, '' மனச்சாட்சி'' என்பது ' ஆத்ம உணர்வாக '' மாறி விடுகிறது - பாபா