azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 16 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 16 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The heart of the devotee flows with love of the Lord through constant remembrance and recitation of His name. Out of this stream of love, devotion emerges. One who is nourished by the nectar of devotion will have no desire for anything else. Affection, attachment, and desire are natural qualities in man. When these qualities are directed towards God and when one is continuously engaged in good deeds, these qualities acquire purity and sacredness. The devotee is ever conscious that the universe is a manifestation of the Divine and is permeated by Him. His life is based on the recognition of the immanence of God in everything. This state of mind is called Prema Advaitam (unity in Love.) Through this love the devotee experiences his oneness with the Divine. Enjoying the bliss of this experience, the devotee does not even desire Liberation from birth and death. Unremitting love of the Lord is everything for him. Such devotion is known as Ananya Bhakti (Total devotion to One and One only). (Divine Discourse, Jan 19, 1986)
WEAR THE GARLAND OF DEVOTION GEMS ROUND YOUR NECK AND
SATURATE YOUR THOUGHT, WORD AND DEED WITH DIVINE LOVE. - BABA
இடையறாத இறை நாமஸ்ரணையின் மூலம், பக்தனின் இதயம், இறைவன் பால் கொள்ளும் ப்ரேமையால் நிரம்பி ஓடுகிறது.இந்த ப்ரேமை ப்ரவாஹத்திலிருந்தே, பக்தி வெளிப்படுகிறது. பக்தி எனும் அமுதத்தால் பேணப்பட்ட ஒருவனுக்கு, வேறு எதன் மீதும் ஆசை இருக்காது.பாசம், பற்றுதல் மற்றும் ஆசை ஆகியவை மனிதனுள் உள்ள இயற்கையான குணங்கள். எப்போது இந்த குணங்கள் இறைவனை நோக்கிச் செலுத்தப்பட்டு, எப்போது ஒருவர் இடையறாது நற்செயல்களில் ஈடுபடுகிறாரோ, அப்போது இந்த குணங்கள் பரிசுத்தம் மற்றும் புனிதத்துவத்தைப் பெறுகின்றன.இந்த பிரபஞ்சம் இறைவனின் ஒரு வெளிப்பாடு மற்றும் இறைவனால் ஊடுருவி இருக்கிறது என்பதை பக்தன் எப்போதும் உணர்ந்தவனாக இருக்கிறான். ஒவ்வொன்றிலும் இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறான் என்ற உணர்வை, அவனது வாழ்க்கை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. இந்த மனப்பாங்கிற்கு ப்ரேம அத்வைதம் (ப்ரேமையில் ஒருமை) எனப் பெயர்.இந்த ப்ரேமையின் மூலம் பக்தன், இறைவனும் தானும் ஒன்றாக இருப்பதை அனுபவிக்கிறான். இந்த அனுபவத்தின் ஆனந்தத்தை அனுபவித்து மகிழ்ந்த பக்தன், பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து விடுதலை அடைவதைக் கூட விரும்புவதில்லை. இறைவன் பால் கொள்ளும் இடையறாத ப்ரேமை மட்டுமே அவனுக்கு எல்லாம்.இப்படிப் பட்ட பக்திக்கு அனன்ய பக்தி (ஒரே ஒன்றின் மேல் மட்டுமே கொள்ளும் முழுமையான பக்தி) என்று பெயர்.
பக்தி எனும் இரத்தின மாலையை உங்களது கழுத்தில் அணிந்து கொண்டு, உங்களது சிந்தனை , சொல் மற்றும் செயலை தெய்வீக ப்ரேமையில் தோய்த்திருங்கள் - பாபா