azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 15 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 15 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone must strive to fill the heart with true devotion. Constant contemplation on the form of the Lord and frequent repetition of the Lord's name are the means by which the heart is filled with the love of God. When there is this love, the devotee is filled with inexpressible ecstasy. It was out of such ecstasy that Kulasekhara Alwar, the royal saint, exclaimed: "Oh Lord! People talk of Moksha (liberation) as the means of redeeming life and getting rid of birth and death. I do not ask for such redemption. I shall be content with loving You and serving You in countless lives. Allow me to love You and serve You - that is the only blessing I seek from You and not Moksha." The universe is permeated with love. It is the embodiment of Vishnu. There is nothing in the cosmos, no place in it where He is not present. To regard the Universe as a manifestation of God and to experience it as such is real devotion. (Divine Discourse, Jan 19, 1986)
EVERYONE MUST STRIVE TO FILL THEIR HEART WITH TRUE DEVOTION. - BABA
ஒவ்வொருவரும், அவர்களது இதயத்தை உண்மையான பக்தியால் நிரப்பப் பாடுபட வேண்டும். இறைவனது ரூபத்தை இடையறாது தியானிப்பதும், இறைவனது திருநாமத்தை அடிக்கடி ஸ்மரணை செய்வதுமே, இதயத்தை , இறைவன் பால் கொள்ளும் ப்ரேமையால் நிரப்புவதற்கான வழிகளாகும். எப்போது அங்கு இந்த ப்ரேமை இருக்கிறதோ, பக்தன் விவரிக்க முடியாத பரவசத்தால் நிரம்பி இருப்பான்.இப்படிப் பட்ட ஒரு பரவசத்தின் காரணமாக, ராஜ ரிஷியான குலசேகர ஆழ்வார், ‘’ ஓ பகவான் ! மக்கள் மோக்ஷத்தை, வாழ்க்கையை பரிபூரணமடையச் செய்வதற்கும், பிறப்பு மற்றும் இறப்பை விட்டு விடுவதற்கும் ஆன வழி என்று பேசுகிறார்கள். நான் இப்படிப் பட்ட பரிபூரணத்தைக் கேட்கவில்லை. எண்ணற்ற பிறவிகளில், உன்னை நேசித்துக் கொண்டு, உனக்கு சேவை செய்து கொண்டிருப்பதிலேயே நான் திருப்தி அடைவேன். உன்னை நேசித்து, உனக்கு சேவை செய்ய அனுமதிப்பாயாகுக- நான் உன்னிடமிருந்து யாசிக்கும் அருள் அது மட்டுமே அன்றி மோக்ஷம் அல்ல ‘’ என்று கூறினார். பிரபஞ்சமே ப்ரேமையில் தோய்ந்திருக்கிறது. அதுவே விஷ்ணுவின் திருவுருவம். இந்த அண்ட சராசரத்தில் எதிலுமோ, எந்த இடத்திலோ அவன் இல்லாமல் இல்லை. ப்ரபஞ்சத்தையே இறைவனின் ஒரு வெளிப்பாடாகக் கருதி, அவ்வாறு அனுபவிப்பதே உண்மையான பக்தியாகும்.
ஒவ்வொருவரும், அவர்களது இதயத்தை
உண்மையான பக்தியால் நிரப்பப் பாடுபட வேண்டும்-பாபா