azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 12 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 12 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The body is the chariot, buddhi (intelligence) is the charioteer, desires are the roads through which it is drawn by the rope of sensual attachments, moksha (liberation) is the goal, and Moola-Virat-Swarupa (the primal-all-pervasive-Divine) is the Master in the chariot. The car which you carry about has to be treated thus. Instead, people are wildly milling round and round, in dreary circles, from birth to death, pulled by wishes or pushed by needs. No milestones on the pilgrim road are crossed, no bridges are negotiated, and no progress is registered. The very process of the journey is ignored. You may say that progress is possible only through My grace; but though My Heart is soft as butter, it melts only when there is some warmth in your prayer. Unless you make some disciplined effort or undertake some sadhana, grace cannot descend on you. The yearning and the agony of unfulfilled aim melts My Heart. That is the Avedana (anguish) that wins grace. (Divine Discourse, Jan 13, 1969)
FIRST, THE NAME SHOULD MELT THE DEVOTEE'S HEART;
THEN ONLY IT CAN MELT GOD'S HEART AND DRAW HIS GRACE UPON THE DEVOTEE. - BABA
உடலே ரதம், புத்தியே சாரதி,புலன் பற்றுதல்கள் என்ற கயிறால் அது இழுத்துச் செல்லப்படும் தெருக்களே ஆசைகள், மோக்ஷமே குறிக்கோள், மூல-விராட்-ஸ்வருபனே (அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் மூலாதாரமான இறைவன் ) ரதத்தின் தலைவன்.நீங்கள் சுற்றித் திரியும் ரதத்தை இப்படித் தான் கையாள வேண்டும்.அதற்குப் பதிலாக,மக்கள், அர்த்தமற்ற வட்டங்களில், பிறப்பிலிருந்து இறப்பு வரை, ஆசைகளால் இழுக்கப்பட்டோ அல்லது தேவைகளால் தள்ளப்பட்டோ, பெருமளவில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு இருக்கிறார்கள்.தீர்த்த யாத்திரையின் எந்த மைல் கல்லும் கடக்கப்படவில்லை, எந்தப் பாலமும் தாண்டப்படவில்லை, எந்த முன்னேற்றமும் பதிவு செய்யப் படவில்லை.பயணத்தின் முறையே உதாசீனப்படுத்தப் படுகிறது.என்னுடைய அருளால் மட்டும் தான் முன்னேற்றம் சாத்தியமாகும் என நீங்கள் கூறலாம்; ஆனால் எனது இதயம் வெண்ணையைப் போல மிருதுவாக இருந்தாலும் கூட, உங்களது பிரார்த்தனையில் சிறிதளவாவது வெப்பம் இருந்தால் மட்டுமே அது உருகும். நீங்கள் ஒரு கட்டுப்பாடான முயற்சியோ அல்லது ஏதாவது ஆன்மிக சாதனையோ மேற்கொண்டால் ஒழிய, இறை அருள் உங்கள் மீது இறங்காது. தாபமும், குறிக்கோள் நிறைவேறாததன் கடும் துயரமுமே எனது இதயத்தை உருக வைக்கும். அந்த அவேதனாவே (வேதனை) இறை அருளைப் பெற்றுத் தரும்.
முதலில், இறைவனது திருநாமம், பக்தனின் இதயத்தை உருக்க வேண்டும்; அதன் பிறகே, அது இறைவனது இதயத்தை உருகச் செய்து, அவனது அருளை பக்தன் பால் ஈர்க்கும்- பாபா