azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 10 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 10 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Man (manava) is called so, because he has the skill to do manana - inner meditation on the meaning and significance of what one has heard. But you have not yet emerged out of the stage of Shravanam (listening)! All the joy you crave for is in you. But like a man who has vast riches in the iron chest, yet who has no idea where the key is, you suffer. Hear properly the instructions, dwell upon them in the silence of meditation, practise what has been made clear therein; then, you can secure the key, open the chest and be rich in joy. All have Love in them, in some form or other, towards some one or other or towards their work or goal. That Love is God, a spark of the God in them. They have Ananda (bliss), however small or temporary. That is another spark of the Divine. They have inner peace, detachment, discrimination, sympathy, and the spirit of service. These are Divine in the mirror of their minds. (Divine Discourse, Shivaratri day, 1969)
EVEN THOSE WHO DENY GOD WILL TREAD THE PILGRIM ROAD,
MELTING THEIR HEARTS OUT IN TEARS OF TRAVAIL. - BABA
மனிதன் (மானவ) என்று அழைக்கப்படுகின்றான் ஏனெனில்,ஒருவன் தான் கேட்டதன் பொருள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை அகத்தில் தியானிப்பது- அதாவது மனனம் செய்வதற்கான திறன் கொண்டவன் ஆதலால் தான். ஆனால், நீங்கள் ஸ்ரவணம் (கேட்பது) என்ற நிலையிலிருந்தே இன்னும் வெளி வரவில்லை! நீங்கள் ஏங்கும் சந்தோஷம் அனைத்தும் உங்களுள்ளேயே உள்ளது. ஆனால், இரும்புப் பெட்டி நிறையப் பணம் இருக்கிறது;இருந்தாலும், அதைத் திறப்பதற்கான சாவி எங்கிருக்கிறது என்பதை அறியாத ஒரு மனிதனைப் போல நீங்கள் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். வழி முறைகளைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்; அவற்றை தியானத்தின் மௌனத்தில் ஆழ்ந்து சிந்தியுங்கள்; அவற்றில் தெளிவாக்கப் பட்டவற்றைக் கடைப்பிடியுங்கள்; பின்னர், நீங்கள் சாவியைப் பெற்று, பெட்டியைத் திறந்து, பணக்காரராக சந்தோஷமாக இருக்கலாம்.அனைவரிடமும், ஏதோ ஒரு விதத்தில், யாரோ ஒருவரிடமோ அல்லது எதனிடமோ அல்லது அவர்களது பணி அல்லது குறிக்கோள் மீதோ,ப்ரேமை இருக்கிறது. அந்தப் ப்ரேமையே இறைவன்; அதுவே அவர்களுள் உறையும் தெய்வீகத்தின் ஒரு ஒளிக்கதிராகும். அவர்களிடம் எவ்வளவு சிறிதாகவோ அல்லது தாற்காலிகமாகவோ இருந்தாலும் கூட, ஆனந்தம் இருக்கிறது. அதுவும் தெய்வீகத்தின் மற்றொரு ஒளிக்கதிரே. அவர்களிடம் அகச்சாந்தி,பற்றின்மை, பகுத்தறிவு, இரக்கம் மற்றும் சேவை உணர்வு ஆகியவை உள்ளன.இவை அனைத்துமேஅவர்களது மனங்கள் எனும் கண்ணாடியில் தெய்வீகமே.
இறைவனை மறுப்பவர்களும் கூட, வேதனையின் கண்ணீரால், அவர்களது இதயங்களை உருகச் செய்து கொண்டே, இறைவனை நோக்கிய தீர்த்த யாத்திரைப் பாதையில் செல்வார்கள்- பாபா