azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 08 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 08 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Schooling is a waste, if children do not learn lasting virtues and do not develop strength of character, as a result of the process. Now they learn a number of copybook maxims; but do not put a single one into practice in daily life! They must learn reverence for parents, teachers, and elders. Even as children, they must learn the glory of God who is their inner Reality; they must understand that they are not the body, but they are the one dehi (indweller), who is the dehi in all. Through bhajan (singing devotional songs) and shravana (listening to tales of God's Glory), these elevating truths can be handed to them by teachers and parents who are themselves aware of these and are practicing them in daily life. Learn your own news, before getting excited about the news of others. Learn A,B,C,D of your own alphabet and then, you will be better able to guide others, in their learning and life! (Divine Discourse, Jan 19, 1969)
THE FIRST TASK OF TEACHERS IS THE CULTIVATION OF VIRTUE IN THE HEARTS OF THE PUPILS.
THIS IS MUCH MORE VITAL THAN THE PROMOTION OF LEARNING. - BABA
குழந்தைகள், அந்த முறையின் மூலம், நிரந்தரமான நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொண்டு, நற்குணநலனின் வலிமையை வளர்த்துக் கொள்ளவில்லை என்றால், பள்ளிப்படிப்பு ஒரு வீணே. அவர்கள் பல மிகச் சிறந்த கருத்துக்களைக் கற்றுக் கொள்கிறார்கள்; ஆனால்,அதில் ஒன்றைக் கூட நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதில்லை ! அவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மூத்தோர்களுக்கு மரியாதை செலுத்துவதைக் கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருக்கும் போதே, அவர்கள், தங்களது உள்ளார்ந்த உண்மை நிலையான இறைவனது மகத்துவத்தைப் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டும்; அவர்கள் தேகம் (உடல்) அல்ல, அனைவருள்ளும் உறையும் தேஹியே ( உள்ளுறைபவர் ) என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பஜனைகள் மற்றும் ஸ்ரவணத்தின் (இறைவனது மகத்துவத்தைப் பற்றிய கதைகளைக் கேட்பது) மூலம், இந்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும் உண்மைகளை, அவற்றை உணர்ந்து, அன்றாட வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், அவர்களுக்கு அளிக்க முடியும். மற்றவர்களின் செய்திகளால் உணர்ச்சி வசப்படுவதற்கு முன், உங்களது சொந்தச் செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.உங்களது அரிச்சுவடியின் அனா, ஆவன்னாவைப் பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள்; அதற்குப் பிறகு, மற்றவர்களது கற்றுக் கொள்ளல் மற்றும் வாழ்க்கையில், நீங்கள் அவர்களுக்கு சிறந்த முறையில் வழி காட்ட முடியும் !
ஆசிரியர்களின் முன் முதல் கடமை, மாணவர்களது இதயங்களில் நல்லொழுக்கத்தை வளர்ப்பதே ஆகும். கற்பதை ஊக்குவிப்பதை விட,இது மிகவும் அத்தியாவசியமானதாகும் - பாபா