azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 07 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 07 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Sadhana (spiritual striving) will disclose to you your identity. But be careful; Sadhana can foster even pride and envy as the by-product of progress. You calculate how much or how long you have done Sadhana and you are tempted to look down on another, whose record is less. You are proud that you have written the name of Sai ten million times; you talk about it whenever you get the chance, so that others may admire your faith and fortitude. But it is not the millions that count but the purity of mind that results from genuine concentration on the name. Your Sadhana must avoid becoming like drawing water from a well in a cane basket! You get no water however often you may dip and pull the basket up. Each vice is a hole in the bucket. Keep the heart pure, keep it whole. (Divine Discourse, Jan 13, 1969)
IF YOU SHED YOUR EGO AND EXPERIENCE DIVINITY,
YOU WILL GET RID OF YOUR PAIN AND ENJOY LASTING BLISS. - BABA
ஆன்மிக சானை, உங்களுக்கு, நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தும். ஆனால், கவனமாக இருங்கள்; ஆன்மிக சாதனை, முன்னேற்றத்தின் துணை விளைவாக, தற்பெருமை மற்றும் பொறாமையையும் கூட பேணி வளர்க்கக் கூடும்.நீங்கள் எந்த அளவு அல்லது எவ்வளவு காலம் ஆன்மிக சாதனை செய்திருக்கிறீர்கள் என்பதைக் கணிக்கிட்டு விடுவீர்கள்;, அதை விடக் குறைவாகச் செய்துள்ள மற்றும் ஒருவரை மட்டமாக நினைக்க நீங்கள் தூண்டப்பட்டு விடுகிறீர்கள். நீங்கள் சாயின் திருநாமத்தை ஒரு கோடி தடவை எழுதியிருக்கிறீர்கள் என்று பெருமைப்படுகிறீர்கள்; மற்றவர்கள் உங்களது நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியைப் புகழ வேண்டும் என்பதற்காக, வாய்ப்புக் கிடைக்கும் போது எல்லாம் அதைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் கோடிக் கணக்குகள் முக்கியமானவை அல்ல; அந்தத் திருநாமத்தின் மீது கொள்ளும் உண்மையான மனக்குவிப்பினால் விளையும் மனத்தூய்மையே முக்கியம் ஆகும். ஒரு கிணற்றிலிருந்து ஒரு மூங்கில் கூடையில் தண்ணீரை நிறைத்துக் கொண்டு வருவது போல ஆகி விடுவதை, உங்களது ஆன்மிக சாதனை தவிர்க்க வேண்டும்! நீங்கள் எவ்வளவு முறை கூடையை முக்கி மேலே இழுத்தாலும், உங்களுக்கு தண்ணீர் எதுவும் கிடைக்காது.ஒவ்வொரு தீய குணமும், அந்தக் கூடையில் இருக்கும் ஒரு ஓட்டையே.உங்கள் இதயத்தை பரிபூரணமாக, பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் அகந்தையைத் துறந்து, தெய்வீகத்தை அனுபவித்து விட்டால், நீங்கள் உங்களது வேதனையை விட்டொழித்து, நிரந்தரமான ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்- பாபா