azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 02 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 02 Dec 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Most people confine themselves to ritualistic worship for a brief time everyday. They don’t attempt to know what for they are performing these rituals. There is no meaning in performing rituals without understanding the purpose and goal of life. The ultimate purpose of all spiritual exercises is to realise the Love Principle (Love of Divine). To foster love is the purpose of all spiritual endeavors. In no circumstance should love be given up or ignored. Where there is love, there can be no hatred, grief or want. Time is passing. You are all growing in years. But there is little change in your attitudes. Purity in thought results in purity in knowledge and wisdom. Self-Realisation comes only through spiritual wisdom (Jnana). To lead a sacred life and have sacred experiences, engage yourself in sacred actions. The good and evil in the world can be changed only when there is a change in men’s actions. Transformation of society must start with transformation of individuals. (Divine Discourse, Jan 1, 1998)
TEST ALL YOUR ACTIONS, WORDS, THOUGHTS ON THIS TOUCHSTONE:
“WILL THIS BE APPROVED BY GOD? WILL THIS REBOUND TO HIS RENOWN?- BABA
ஒவ்வொரு நாளும், ஒரு சில நேரம் சடங்கு ரீதியான வழிபாடு செய்வதோடு, பெரும்பாலானவர்கள் தங்களை நிறுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் இந்த சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முற்படுவதில்லை. வாழ்க்கையின் குறிக்கோள் மற்றும் இலக்கைப் புரிந்து கொள்ளாமல் சடங்குகளைச் செய்வதில் ஒரு அர்த்தமும் இல்லை.அனைத்து ஆன்மிக சாதனைகளின் இறுதியான குறிக்கோள் ப்ரேம தத்துவத்தை உணருவது தான். ப்ரேமையைப் பேணுவதே அனைத்து ஆன்மிக சாதனைகளின் குறிக்கோள் ஆகும். எந்த சந்தர்ப்பத்திலும், ப்ரேமையை விட்டு விடவோ அல்லது உதாசீனப் படுத்தவோ கூடாது. எங்கு ப்ரேமை இருக்கிறதோ, அங்கு வெறுப்போ, துயரமோ அல்லது தேவையோ இருக்க முடியாது. காலம் கடந்து கொண்டே இருக்கிறது. நீங்களும் வருடங்களாக வளர்ந்து கொண்டே போகிறீர்கள். ஆனால், உங்களது மனப்பாங்குகளில் சிறிதளவு மாற்றம் கூட இல்லை. சிந்தனையின் தூய்மை, அறிவு மற்றும் ஞானத்தில் தூய்மையைத் தருகிறது. ஞானத்தின் மூலம் மட்டுமே ஆத்ம சாக்ஷாத்காரம் வருகிறது.ஒரு புனிதமான வாழ்க்கை நடத்தி, புனிதமான அனுபவங்களைப் பெறுவதற்கு, உங்களை நீங்களே புனிதமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். மனிதச் செயல்களின் ஒரு மாற்றத்தினால் மட்டுமே, உலகில் உள்ள நல்லவை மற்றும் கெட்டவற்றை மாற்ற முடியும். சமுதாயத்தின் நல்மனமாற்றம், தனி மனிதர்களின் நல்மனமாற்றத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்.
உங்களது அனைத்து செயல்கள், சொற்கள் மற்றும் சிந்தனைகளை, ‘’இது இறைவனால் ஏற்றுக் கொள்ளத்தக்கதா? இது அவனது கீர்த்திக்கு உகந்ததா?’’ என்ற உரைகல்லில் சோதித்துப் பாருங்கள். - பாபா