azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 27 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 27 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
What man should seek today is not pleasure. Nor is his goal sorrow. Wherefrom does pleasure come? When pain is got rid of, pleasure is secured. Man should bring under his control the source of pleasure and pain. More than pleasure, it is pain that awakens wisdom in man. If you study the lives of great men, you find that it is out of trouble and pain that they derived wisdom. Without sorrow there can be no wisdom. It is pain that teaches many wise lessons to man. Not realizing this profound truth, man pursues pleasure endlessly. No doubt man needs to be happy. But how is happiness to be achieved? It is only when sorrow is overcome, man realises happiness. Hence everyone should welcome sorrow in the same spirit in which they greet happiness. Every man has his origin in Truth. He is sustained by Truth, and merges in Truth. He is the embodiment of Truth. When every individual recognises this truth, the whole world will be permeated by Truth. (Divine Discourse, Jan 1, 1998)
YOU ARE THE ARCHITECT OF YOUR OWN PLEASURE AND PAIN.
HENCE YOU SHOULD FACE WITH EQUANIMITY WHATEVER HAPPENS TO YOU, BE IT GOOD OR EVIL. - BABA
மனிதன் இன்று நாட வேண்டியது சுகத்தை அல்ல.துக்கமும் அவனது குறிக்கோள் அல்ல. சுகம் எங்கிருந்து வருகிறது? துன்பம் எப்போது நீக்கப் படுகிறதோ, அப்போது இன்பம் பெறப்படுகிறது.சுகம் மற்றும் துக்கத்தின் மூலாதாரத்தை மனிதன் அவனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். சுகத்தை விடவே, துக்கம் தான் மனிதனுள் ஞானத்தைத் தட்டி எழுப்புகிறது. தலை சிறந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை நீங்கள் படித்தால், கஷ்டம் மற்றும் துன்பத்திலிருந்து தான் அவர்கள் ஞானத்தை அடைந்தார்கள். துக்கம் இன்றி ஞானம் இருக்க முடியாது. துன்பமே மனிதனுக்கு பல அறிவுள்ள பாடங்களைப் புகட்டுகின்றது. இந்த ஆழமான உண்மையை உணராமல், மனிதன் இன்பத்தை முடிவில்லாமல் பின் தொடர்கிறான்.மனிதன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த சந்தோஷத்தை எப்படி அடைவது? துக்கத்தை வென்றால் மட்டுமே மனிதன் சந்தோஷத்தை உணருகிறான். எனவே, எந்த உணர்வுடன், சந்தோஷத்தை வரவேற்கிறார்களோ, அதே உணர்வுடன், ஒவ்வொருவரும் துக்கத்தையும் வரவேற்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது மூலாதாரம் சத்தியமே. அவன் சத்தியத்தினாலேயே போஷிக்கப் படுகிறான், சத்தியத்தில் தான் இரண்டறக் கலக்கிறான். அவன் சத்தியத்தின் திருவுருவமே. ஒவ்வொரு மனிதனும் இந்த சத்தியத்தை உணரும் போது, உலகனைத்தும் சத்தியத்தில் தோய்ந்திருக்கும்.
உங்களது சொந்த இன்ப, துன்பங்களை நிர்மாணிப்பவர் நீங்களே.எனவே, உங்களுக்கு எது நடந்தாலும், அது நல்லதோ அல்லது கெட்டதோ, அதை சமச்சீரான மனப்பாங்குடன் நீங்கள் எதிர் கொள்ள வேண்டும் -பாபா