azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 Nov 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Once when Duryodhana said that he was not afraid of God and man, Krishna told him that he was indeed, pitiable! The pasu (animal) fears; the mriga (beast) terrifies. Man should be neither. He should neither terrify nor get terrorised. He must be neither a coward nor a bully. If he is a coward he is an animal; if he is a bully he is a danava, an ogre. Every one of you is a temple, with the Lord installed in your heart, whether you are aware of it or not. The Lord is described in the Purusha Sukta as thousand headed; it does not mean that He has just thousand heads, no more, no less. It means that the thousands of heads before Me now have just one heart, which gives life and energy to all, and that heart is the Lord. No one is separate from his neighbour; all are bound by the one life-blood that flows through the countless bodies. - Divine Discourse, Feb 18, 1966
WHEN THE LOVE PRINCIPLE IS UNDERSTOOD AND PRACTICED,
MAN WILL BE FREE FROM ANXIETY AND FEAR. - BABA
ஒரு முறை, துரியோதனன், தான் மனிதனுக்கோ அல்லது கடவுளுக்கோ பயந்தவன் இல்லை என்று கூறிய போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவன் உண்மையிலேயே பரிதாபத்திற்கு உரியவன் என்று கூறினார்! பசு (மிருகம்) அஞ்சுகிறது; ம்ருக (கொடிய விலங்கு) அச்சுறுத்துகிறது. மனிதன் இந்த இரண்டாகவும் இருக்கக் கூடாது. அவன் அச்சுறுத்தவோ அல்லது அச்சுறுத்தப் படவோ கூடாது. அவன் ஒரு கோழையாகவோ அல்லது கொடுமைப் படுத்துபவனாகவோ இருக்கக் கூடாது.அவன் ஒரு கோழையாக இருந்தால், அவன் ஒரு மிருகமே;அவன் ஒரு கொடுமைப் படுத்துபவனாக இருந்தால், அவன் ஒரு தானவ, ஒரு பேயே ஆவான். நீங்கள் உணர்ந்து இருந்தாலோ அல்லது இல்லா விட்டாலோ, நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் இதயத்தில் இறைவன் கொலு வீற்றிருக்கும் ஒரு ஆலயமே.புருஷ ஸூக்தத்தில் இறைவன் ஆயிரம் தலை கொண்டவன் என வர்ணிக்கப் படுகிறான்; அதன் பொருள் அவன், ஒன்று கூடவோ அல்லது குறையவோ இல்லாமல், வெறும் ஆயிரம் தலை மட்டும் கொண்டவன் என்பதல்ல. அதன் பொருள்,என் முன் இப்போது உள்ள ஆயிரக்கணக்கான தலைகளுக்கு, அனைவருக்கும் உயிரும், சக்தியும் அளிப்பது, ஒரே ஒரு இதயமே அதுவே, இறைவனின் இதயம் என்பது தான். எந்த ஒருவரும் அவருக்கு அடுத்து இருக்கும் எவரிடமிருந்தும் வேறு பட்டவர் அல்ல; எண்ணற்ற உடல்களில் பாயும் ஒரே உயிர் குருதியால் அனைவரும் இணைக்கப் பட்டவர்களே.
ப்ரேம தத்துவத்தைப் புரிந்து கொண்டு, கடைப்பிடித்தால்,
மனிதன் கலக்கம் மற்றும் அச்சத்திலிருந்து விடுபட்டு விடுவான்- பாபா